வைக்கோலை சேமித்து பயன்படுத்தும் செயற்பாட்டுத் திட்டம்

(டில்ஷான் )
மட்டக்களப்பு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் எழுவான் விவசாய உற்பத்தியாளர்களுடன் ஒன்றிணைந்து வைக்கோலை சேமித்து பிரயோசனப்படுத்தும் முறையினை (STRAW BAILER)    அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன்; அறிவுரைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி திருமதி உதயராணி குகேந்திரன் தலைமையில் ஆயித்தியமலை வயல்வெளியில் வைக்கோலை பிரயோசனப்படுத்துவது தொடர்பான செய்முறை பயிற்சித்திட்டம் இடம் பெற்றது.

கால்நடை உணவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் இக் காலகட்டத்தில் வைக்கோலை குறைந்த இடப்பரம்பில் நிறைவாக சேமித்து வைப்பதற்கும் வைக்கோல் தட்டுப்பாடு நிலவும் வேறு பிரதேசங்களுக்கு சிரமமின்றி எடுத்து செல்வதற்கும் வைக்கோலை விற்பனை செய்வதற்கும் இந்த புதிய தொழில் நுட்பம் வசதியாக அமையும் என்றும்  கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர்  டாக்டர் ரீ.கே. தவராஐன் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் நிகழ்வில் வவுணதீவு கால்நடை வைத்தியர் டாக்டர் கே.எஸ். சண்முகலிங்கம்,   USAID நிறுவன பிரதிநிதி துஷ்யந்தன் வவுணதீவு கால்நடை வைத்தியர் டாக்டர் கே.எஸ்.சண்முகலிங்கம், எழுவான் பண்ணை முகாமையாளர் அருளானந்தம் ரமேஷ், தும்பங்கேணி கால்நடை வைத்தியர் எஸ்.எம்.நபீர், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஜே.பி.சிவசண்முகநாதன், ஏ.கோவேந்திரன், ஈ.கஜேந்திரகுமார, என்.மனோகரன், எஸ்.பி.தேவராசா, பி.ஜெயந்தன்,ஏ.நித்திலேவரன், ஏ.சிங்கராசா,என்.கிருஷ்ணபிள்ளை, செல்வி.எம்.ஆர்.எப்.சணா எம்..பயாஸ் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் செங்கலடி, வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த கால்நடை பண்ணையாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வைத்திய அலுவலக கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.பி.சண்முகநாதன் கருத்து தெரிவிக்கையில் பண்னையாளர்கட்கு கால்நடை உணவாக வைக்கோலை சேமிப்பது மட்டுமன்றி இதனை வியாபார முயற்சியாகவும் மேற்கொள்ள முடியும் என்பதுடன் இதற்காக தனியார் வங்கிகள் இலகு வட்டியுடன் கடன் வழங்க முன்வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.