இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு இத்தியடி பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி 9 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் 6 ஆண்களும் 3 பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார்   தெரிவித்தனர்.


இலக்கத்தகடு பொருத்தப்படாத முச்சக்கர வண்டியில் கூறிய ஆயுதங்களுடன் சென்றவர்கள் இத்தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்தில் வீடுகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.