சுவீஸ் உதயத்தால் கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு

(நடனம்,எம்.ஏ.றமீஸ்)
கல்முனை மாணவ மீட்பு பேரவையின் ஏற்பாட்டில் சுவீஸ் உதயம் அமைப்பின் நிதியுதவி மூலம் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றவுள்ள மாணவா்களுக்கு நடாத்தப்பட்டு வருகின்ற இலவச வகுப்பில் காலந்துகொள்ளும் மாணவர்களின் பெற்றார்களுடனான சந்திப்பும் மாணவா்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வும் சனிக்கிழமை மாணவ மீட்பு பேரவையின் கல்விப்பொறுப்பாளா் பாவாணா் அக்கரைப்பாக்கியன் தலைமையில் பேரவையின் தலைவா் பொறியியலாளா் கலாநிதி எஸ்.கணேசின் வழிகாட்டலில் றாணமடு இந்து மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது
இதில் சுவீஸ் உதயம்அமைப்பின் பொருளாளா் கே.துரைநாயகம் மாணவ மீட்பு பேரவையின் தலைவா் பொறியியலாளா் கலாநிதி எஸ்.கணேஸ்,கிழக்கின் உதயம் அமைப்பின் தலைவரும் பிரதிக்கல்விப்பணிப்பாளருமான எம்.விமலநாதன்,போரதீவூப்பற்று கோட்டக்கல்விப்பணிப்பாளா் பாலச்சந்திரன்,ஆசிரியா் பி.பரமதயாளன்,ஆசிரியரும் ஊடகவியலாளருமான சா.நடனசபேசன் ,ஆசிரியரும் ஊடகவியலாளருமான எம்.ஏ.றமீஸ்,பேரவையின் உறுப்பினா் றமணன்,கிழக்கின் உதயத்தின் உறுப்பினா் கங்கா உட்பட பலா் நிகழ்வில் கலந்துகொணடதுடன் நாவிதன்வெளிக் கோட்டத்திற்குட்பட்ட றாணமடு இந்துமகாவித்தியாலயம்,சரஸ்வதிவித்தியாலயம்,ஸ்ரீ முருகன் வித்தியாலயம் ,கண்ணகிவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் பிள்ளைகளும் பெற்றார்களும் கலந்துகொண்டதுடன் இவ் இலவச வகுப்பிற்காக 2014 ஆண்டு இரண்டு இலட்சமும்,2013 ஆண்டிற்கு இரண்டரை இலட்சமும் சவீஸ் அமைப்பு ஒதுக்கீடு செய்துள்ளது அத்துடன் இச்சேவையினை செய்த சுவீஸ் அமைப்புக்கும் அதற்கு வழிவகுத்த மாணவ மீட்பு பேரவையின் தலைவா் பொறியியலாளா் கலாநிதி எஸ்.கணேசிக்கும் அப்பிரதேச பெற்றார்களும் பொதுமக்களும் நன்றிதெரிவித்துள்ளனா்