தில்லை மண்டூர் கந்தனின் ஆலய கொடியேற்றம்

 மட்டக்களப்பு நகரின் தெற்கே சுமார் 38 கிலோமீற்றர் தூரத்தில் இயற்கை அழகு செறிந்த
மண்டூர் கிராமம் அமைந்துள்ளது. தில்லை மரங்கள் அடர்ந்த காட்டில் அமைதியான சூழலிலே தானாக அடியார்களுக்கு அருள் பாலிப்பதற்காக
வந்துதித்த ஒளி வீசும் வேலாயுதமாகவும்.அதாவது முருகப்பெருமானார் சூரபத்மனை
சங்கரித்த வேலாயுதத்தில் இருந்து பிறந்த மூன்று ஒளிப்பிளம்புகளில் ஒன்று உகந்த மலை
இலும் இன்னொன்று திருக்கோவில் வெள்ளை நாவல் மரமொன்றிலும் மற்றையது மண்டூரில்
தில்லை மரத்திலும் வேல்களாக உதித்து காட்சி கொடுத்தன என்று.முந்திய புத்தகங்கள் சான்று பகிர்கின்றன

தில்லை மண்டூர் கந்தனின் ஆலய கொடியேற்றம் 19.08.2014 அன்று அதாவது செவ்வாய் கிழமை இரவு இடம் பெற்றது  நிகழ்வில் என்றும் இல்லாதவாறு பெருந்திரளான பக்தர்களின் வருகை  காணப்பட்டது. தொடர்ந்து 20திருவிழாக்கள் நடைபெற்று 21ம் நாள் பூரணையும் திருவோண நட்சத்திரமும் கூடிய புனிதநன்நாளில்  அதாவது   08.09.2014 அன்று மூங்க்கில் ஆறும்    மட்டுவாவியும் சங்கமிக்கும் புண்ணியதீர்த்தத்தில் நடை  பெறும்   தீர்த்றோச்சவத்துடன் நிறைவுறும் .....