புனித மிக்கேல் கல்லூரியின் 141 வது கல்லூரி தினம்

 மட்டக்களப்பின் அடையாளங்களில் ஒன்றான புனித மிக்கேல் கல்லூரி தினம் கடந்த 29.09.2014 நினைவு கூறப்பட்டது கல்லூரி முதல்வர் திருமதி C.S மாசிலாமணி அம்மணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் நிகழ்வில் புதிதாக இவ்வருடம் குருக்களாய் திருநிலைப்படுத்தப்பட்ட குருக்களினால்  விழா திருப்பலி நிறைவேற்றப்பட்டதோடு கல்லூரிக்கே உரிய பாரம்பரிய நிகழ்வுகளும் மேலும் பழைய மாணவர்களினால் நடாத்தப்பட்ட ஆங்கில மொழிமூல கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும் வெகுவிமர்சையாக நடைபெற்றது நிகழ்வில் யேசு சபை மேலாளர் அருட்தந்தை போல் சற்குணநாயம், மறைகோட்ட முதல்வர் மொறாயஸ் அடிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் நிகழ்வை கலந்து சிறப்பித்தனர்




புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடார்ந்த நிகழ்வுகள் - 2014

கல்லூரி தினத்தை தொடர்ந்து கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் கல்லூரி தினத்தை தாங்களும் சிறப்பித்துக் கொள்ளும் வழமையையும், பாரம்பரியத்தை கொண்டுள்ள புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்க வருடார்ந்த கல்லூரி தின நிகழ்வுகள் இம்மாதம் எதிர்வரும் 18ம் திகதி (18.10.2014) காலை 9.30 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கும் பழைய மாணவர்களுக்குமான சினேகபூர்வ கிறிக்கட் போட்டியும் தொடர்ந்து மதிய போஷன விருந்தும் மாலை 5.30 மணிக்கு கூடைப்பந்தாட்ட போட்டியும் மறுநாள் 19.10.2014 காலை 7.30 மணிக்கு விஷேட திருப்பலியும் திருப்பலியின் பின்னர் பாரம்பரிய நிகழ்வுகள், காலை உணவு விருந்தும் தொடர்ந்து பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளதாகவும் நிகழ்வுகளில் பழைய மாணவர்கள் யாவரையும் கலந்து சிறப்பிக்குமாறும் கேட்டுக் கொள்வதாக சங்க பொதுச் செயலாளர் மைக்கவைட் திரு.ஐ.து சில்வெஸ்டர் அவர்கள் தெரிவித்துள்ளார்.