மீள்குடியேற்றப் பிரதியமைச்சரின் மக்கள் சந்திப்பு! குறை நிறைகள் ஆராயப்பட்டது.

(வரதன்)
வவுணதீவு பிரதேசத்திலுள்ள மகிழவட்டவான் கிராமத்தில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்வு கடந்த திங்கள்கிமை 15ம் திகதி இடம்பெற்றது.

இந் நிகழ்வின்போது அப்பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மக்களின் அத்தியவசிய தேவைகள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் வீதி, குடிநிர்,வீடுகள் போன்றவை குறைபாடாக மக்களால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது மீள்குடியேற்றப் பிரதியமைச்ர் வீட்டுவசதி இல்லாத மிக கஸ்ட நிலையில் இருக்கும் 50 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் மற்றும் குடிநீர் பிரச்சனை இப் பிரதேச செயலாளர் பிரிவில் கட்டம்கட்டமாக வழங்கப்பட்டுக்கொண்டிருப்பதனால் அதற்கேற்றவாறு வழங்கிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வீதிப் பிரச்சனை வீதிக்கான அதிகாரசபை மற்றும் திணைக்களங்களுடன்பேசி அதற்கான தீர்வு பெறப்படும் எனவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வின்போது பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மீள்குடியேற்றப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.