மட்டக்களப்பில் சர்வதேச அமைதி தினம்


(சிவம்)

ஜீவசக்தி அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச அமைதி தினத்தினை முன்னிட்டு வாகனப் பேரணியும் கூட்டமும் ஜீவசக்தி அமைப்பினால் மட்டக்களப்பில் எதிர்வரும் 20 21 ஆம் திகதிகளில் இடம்பெற இருக்கின்றது.

20ம் திகதி காலை வாகரை கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் இருந்து புறப்பட்டு மட்டு பஸ் நிலையத்தை வந்தடையும் இப்பேரணியானது பனிச்சங்கேணி வாகரை கிரான் ஊடாக வரும்போது செங்கலடி சந்தியில் 10 நிமிடம் தரித்து நிற்கும்.


21ம் திகதி காலை முதலைக்குடா மகாவித்தியாலயத்தில் இருந்து புறப்பட்டு களுவாஞ்சிகுடி ஊடாக மட் கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலய மைதானத்தினை வந்தடையும்.

இதன்போது பட்டிருப்பு சந்தை தாழங்குடா சந்தி ஆரையம்பதி சந்தை ஆகிய இடங்களில் 10 நிமிடங்கள் தரித்து நிற்கும்.

சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் பி.பகல் 4.30 மணியளவில் 1000 பார்வையாளர்கள் மத்தியில் 100 பலூன்கள் பறக்க விடப்படும் இந்நிகழ்வில் மட்டு அரச அதிபர் உட்பட அரச உயர் அதிகாரிகளும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.

பின்பு அன்று மாலை கல்லடி சாந்தி திரையரங்கில் கானொளி ஒன்றும் ஒளிபரப்பப்படும்.

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பிரேம் ராவட் அவர்களின் அமைதி பற்றிய அறிவியல் சொற்பொழிவு பேரணியின்போது ஒலிபரப்பப்படும்.