பாடுமீன்களின் சமர் – புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை வெற்றி - Video

(வரதன்)

ஐந்தாவது ஆண்டாக நடைபெற்றுவரும் இந்த கிறிக்கட் சுற்றுப்போட்டியில் வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை, புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை ஆகியவற்றுக்கிடையில் இந்த கிரிக்கட் போட்டி மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் துடுப்படுத்தாடிய மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை அணி 19.4 ஓவரில் வெற்றி இலக்கினை அடைந்தது.