கிழக்கு பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவர்களுக்கான கற்கை நெறிகள் மீள் ஆரம்பம்

(சித்தாண்டி நித்தி) கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீட மற்றும் வணிக முகாமைத்துவ பீட 2ம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 27.10.2014ம் திகதி திங்கள்கிழமை ஆரம்பிக்கபட்டவுள்ளன. 

இதேவேளை கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த 2ம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 03.11.2014 ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், 

ஆரம்பிக்கப்படவிருக்கும் 2ம் வருட மாணவர்களுக்கான விடுதி வசதிகள் தற்காலிகமாக பொருத்தமான தனியார் இடங்களில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக நிருவாகம் தெரிவித்தது.