மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி.

(சக்தி)

பட்டிருப்புக் கல்வி வலயத்தின் போரதீவுப் பற்றுக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 163 புள்ளிகளைப் பெற்று தவத்துரை - லதீஸ்காந் என்ற மாணவன் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

மிகவும் கஸ்ற்றப்பிரதேசமான களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்று இந்த மாணவன் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளன்.

களுமுந்தன்வெளிக் கிராமத்தினைச் சேர்ந்த தவத்துரை - பரமேஸ்வரி அகியோரின் புதல்வனான லதீஸ்காந்த 163 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளதுடன், பாடசாலைக்கும் பெற்றோருக்கும், கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கஸ்ற்றப்பட்ட குடும்பத்திலுள்ள இம்மாணவன் மிகவும் கஷ்ற்றத்தின் மத்தியில் படித்து, எதுவித மேலதிக வகுப்புக்களுக்கும் செல்லாமல் கற்று இச்சாதனையினைப் புரிந்துளதாக பாடசாலைச் சமூகம் தெரிவிக்கின்றது.

இவரை பாடசாலை அதிபர் சி.சிவபாதம், பிரதி அதிபர் க.சந்திரகுமார், கற்பித்த ஆசிரியர், கி.மகாலிங்கம், மற்றும், ஆசிரியர்கள், ஏனைய சகமாணவர்கள் உட்பட கிராம மக்களும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.