இரண்டாம் கட்ட பயணாளிகளுக்கான தொழில் வழிகாட்டல் பயிற்சி


(சுரேஸ்)
கமீட் நிறுவனம் கன்டீகப் இன்டர்நெசனல் அமைப்புடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் அமுல்ப்படுத்தும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் செயற்திட்டத்திற்கு அமைய மாவட்டத்தின் உள்ள பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இரண்டாம் கட்ட பயணாளிகளுக்கான கால்நடை வளர்ப்பு தொடர்பான தொழில் வழிகாட்டல் பயிற்சி கமீட் அமைப்பின் பிரதான காரியாலயத்தின் திட்ட உத்தியோகத்தர் எம்.ஜெயகுமார் தலைமையில் இன்று 30 நடைபெற்றது.
இத்தொழில் வழிகாட்டல் பயிற்சின் போது வவுணதீவு, செங்கலடி, கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளும் பிரதேச சமூக ஊக்குவிப்பாளர்களுமாக பலர் கலந்து கொண்டதுடன் பயிற்றுனராக மட்டக்களப்பு கால்நடை வைத்தியர் காரியாலயத்தின் வைத்திய அதிகாரி எம்.ஏ ஹாதி கால்நடை வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் பயிற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது.