சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு சிறுவர் கண்காட்சி

(சக்தி)

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு இன்று  புதன் கிழமை (01) மட்டக்களப்பு மாவடத்தில் பல இடங்களிலும் சிறுவர் தொடர்பான நிகழ்வுகள் இடம்பெற்றன.

அந்த வகையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட செட்டிபாளையம், சிவன் கிட்ஸ் கோம்; பாலர் பாடசாலையில் சிறுவர் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.


பெற்றார்களின் ஒத்துழைப்புடன் சிறார்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்களின் கைவண்ணத்தில் செய்யப்பட்ட பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சிவன் கிட்ஸ் கோம்; பாலர் பாடசாலையின் அதிபர் க.துiராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் அவர்கள் பிரதம அதிதியாக காலந்து கொண்டு கண்காட்சிக் கூடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பட்டிருப்புக் கல்வி வலய முன்பள்ளி உதவிக் பல்விப் பணிப்பாளர்  நா.புவனசுந்தரம்,  மண்முனை தென் எருவில் பற்று மன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி.சீ.அருந்ததி, மற்றும் பெற்றார்கள், சிறுவர்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட் புதுக்குடியிருப்பு கதிரவன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 150 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று (01.10.2014) வழங்கி வைக்கப்பட்டன.

மட்.தாளங்குடா றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் “கற்றலை ஊக்குவித்து ஆற்றலை வளர்த்தல்” எனும் தொனிப்பொருளில் இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்வில் மன்முனைப்பற்று பிரதேச செயலாளர் மண்முனைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி, மற்றும் மன்முனைப்பற்று பிரதேசசபை செயலாளர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்ததாக புதுக்குடியிருபு கதிரவன் நிறுவனத்தின் நிறுவுனர் த.இன்பராசா தெரிவித்தார்.

இந்நிலையில் எருவில், மகிழூர் போன்ற இடங்களிலும் சிறுவர் தொடர்பாக நிகழ்வுகள். ஊர்வலங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்.