பேத்தாளை பொது நூலகம் அகில இலங்கை ரீதியில் முதலிடம்

(த.லோகதக்சன்)

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சும் களனி பல்கலைகழக நூலக மற்றும் தகவல் விஞ்சான பிரிவும் இணைந்து நடாத்திய தரப்படுத்தலில் அகில இலங்கை ரீதியில் பிரதேச சபைகளுக்கான நூலகங்களின் தரப்படுத்தலில் கோறளைப்பற்று பிரதேச  சபைக்கு உட்பட்ட பேத்தாழை   பொது நூலகம் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பெற்று கொண்டது  

21/10/2014 இடம் பெற்ற  சுவர்ண புரவர  விருது வழங்கும் விழாவில்   அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களால் கோறளைப்பற்று பிரதேச  சபை செயலாளர் , நூலகர் ஆகியோரிடம் இந்த விருது வழங்கபட்டது.

கிழக்கின் முன்னாள் முதல்வரும் , அதிமேதகு ஜனாதிபதி ஆலோசகரும் ஆன சி . சந்திரகாந்தன் அவர்களின் அறிவு புரட்சியின் ஒரு மையில் கல்லாக பேத்தாழை பொது நூலகமானது   நிறுவபட்டது இவ் நூலகம்   10/12/2011 அன்று மக்கள் பாவனைக்கு வழங்கபட்டது  . 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் , 03 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பௌதிக வளம் , இணையதள வசதிகள் என பல்வேறு வசதிகளை கொண்ட இந்த நூலகம் மாணவர்களின் அறிவு வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது

இம் மாபெரும் நூலகத்தினை அமைத்து தந்தமைக்காக நிறுவனர் சி . சந்திரகாந்தன் அவர்களுக்கு பொது நூலக  ஊழியர்கள்  பொது மக்கள்  நன்றியினையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டனர்