பசு மாடுகளின் தலையை வெட்டி எச்சரிக்கை !

(அபிவரன்)
அம்பாரை திருக்கோவில்  பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வட்டமடு மேச்சல் தரையில் பட்டியில் இருந்த இரண்டு பசு மாடுகளின் தலையை இனம் தெரியாதோரால் வெட்டி எடுத்து சாகாமம் பிரதான வீதி நாவடிச் சந்தியில் வைக்கப்பட்டு எங்கள் காணிகளுக்குள் இருந்து கால்நடைகளை வெளியேற்றாவிட்டால் அதற்கு ஏற்படும் நிலை தான் உங்களுக்கும் ஏற்படும் என எச்சரிக்கையிலான  வாசகம் அடங்கிய சுலோகம் எழுதிவைக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்;கிழமை(28) இரவு இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.



இதுபற்றி தெரியவருவதாவது,
அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வட்டமடு மேச்சல்தiர் தரைபகுதியை விவசாயிகள் அத்துமீறி விவசாயம் செய்யமுற்படுகின்றனர் என கால்நடையாளர்கள் குற்றஞ்சாட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடாத்திவருகின்றனர் அதேவேளை விவசாயிகள் தங்களது காணிக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் விவசாய திணைக்களம் அனுமதிவழங்கியுள்ளது என அவர்களும் போராட்டங்களை நடாத்திவருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை வட்டமடுமேச்சல் தரைபகுதியில்  கால்நடையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையையடுத்து பொலிசார் இருசாராரையும் அப்பகுதிக்கு செல்லக்கூடாது என அறிவித்து இவர்களுக்கு எதிராக பொத்துவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் திங்கட்கிழமை (27)செய்யப்பட்டது இதனையடுத்து நீதிமன்றம் இன்று புதன்கிழமை வரை இருபகுதியினரும் அப்பகுதிக்கு செல்லக்கூடாது என உத்தரவிட்டது இவ்வாறான நிலையில் வட்டமடு மேச்சல் தரைபகுதியில் உள்ள இரு பட்டிகளில் உள்ள இரண்டு பசுமாடுகளை பட்டியடியில் வைத்து இனம் தெரியாதேரால்அதன்  தலைகளை வெட்டி  எடுத்துக் கொண்டுவந்து சாகாமம் வீதியல் நாவலடிச் சந்தியில் வைக்கப்பட்டுள்ளது இதனை இன்று புதன்கிழமை காலை 6.00 மணியளவில் அந்தப்பகுதிக்குச் சென்றவர்கள் கண்டு விவசாயபொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்