காரைதீவில் நடைபெற்ற கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தின் கூட்டத்தெடர் நிகழ்வுகள்

(சித்தாண்டி நித்தி) கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மாதாந்த கூட்டத் தொடர் நிகழ்வுகள் சனிக்கிழமை (22) காலை ஒன்றியத்தின் தலைவர் வி.ரீ.சகாதேவராஜா தலைமையில் காரைதீவு பிரதேச பொது நூலகத்தில நடைபெற்றது. 

இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு இந்து ஊடகவியாளர் ஒன்றியமானது மாதாந்தம் அதன் அங்கத்தவர்களை இணைந்து கிழக்கின் பல பகுதிகளில் கூட்டங்களை ஒழுங்கு செய்வதோடு இந்து ஊடகவியலாளர்களின் வளர்ச்சிப்போக்கு, எதிர்கால செயற்பாடுகள் மற்றும் இந்து ஊடகவிலாளர்கள் கிழக்கில் எதிர்கொள்ளும் சவால்கள் என பல்வேறுபட்ட விடயங்களை ஆராய்ந்துவருகின்றது. 

நடைபெற்ற மூன்றாவது கூட்டத்தொடர் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியதை தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றது. தலைவரின் தலைமையுரை மற்றும் கடந்த மாதா கூட்டத்தொடர்  அறிக்கையை அதன் செயலாளர் பாக்கியநாதன் அவர்களினால் வாசிக்கபட்டதும் பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதை தொடர்ந்து 

கடந்த மாதத்தில் மலையகத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி பணிகளை கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியம் மிகவும் சிறப்பான முறையிலே தமது பணியை ஆரம்பித்து பெறப்பட்ட நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிடட்டதுடன் நிவாரண பொருட்களை கையளித்திருந்தது. நடைபெற்ற நிவாரப்பணி வெற்றிகரமாக அமைவதற்கு பல்வேறுபட்ட வழிகளில் உதவிகளை கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்துக்கு வழங்கியிருந்தமைக்காக சிறிகாந் மற்றும் மனித அபிவிருத்தி நிறுவனத்தின் கிழக்கு மாகாண திணைக்கள பணிப்பாளர் சிறில் இருவரையும்; பாராட்டி ஒன்றித்தின் தலைவர் மற்றும் செயலாளரினால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.