அடை மழையினால் அடங்கியது மட்டக்களப்பு முடங்கியது போக்குவரத்து - வீடியோ


(சிவம்)( வரதன்)

கடந்த புதன்கிழமை (19) முதல் மட்டக்களப்பில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால்  மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு அரச அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முகத்துவாரத்தை வெட்டி விடுமாறு பணித்தார்.

இதற்கிணங்க இன்று மாலை 4.00 மணிக்கு பாலமீன்மடு முகத்துவாரம் வெட்டப்பட்டு ஆற்று நீர் கடலைநோக்கிப் பாய்வதாக  மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை (21) காலை 8.30 மணிமுதல் பி;.பகல் 2.30 மணிவரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரில் 30.1 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பாளர் கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பஸ் நிலையம், மாநகர சந்தை வளாகம், லேடி மெனிங் ரைவ், புதூர் திமிலைதீவு வீதிகள் மற்றும் நகரின் தாழ்நிலப் பிரதேசங்கள் மற்றும் வாவியின் மட்டத்திற்கு அருகில் உள்ள வீதிகளில் வெள்ளம் பாய்கின்றதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன.