சர்ச்சைக்குரிய கரிமலையூற்று ஜும்மாப் பள்ளியில் 5 வருடங்களின் பின்னர் ஜும்மாத் தொழுகை!

(சுழற்சி நிருபர் )
கடந்த ஐந்து வருடங்காளக அதியுயர் பாதுகாப்பு வலயம்  என்ற கட்டுப்பாட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டுவரப்பட்டு முஸ்லிம்கள் எவரும் தமது வணக்க வழிபாடுகளை மேற்கொள்ள முடியாதவாறு தடைசெய்யப்பட்டிருந்த திகோணமலை கரிமலையூற்று ஜும்மாப் பள்ளியில் இன்று வெள்ளிக்கிழமை 19.12.2014 ஜும்மாத் தொழுகை இடம்பெற்றது.

பிரதேச முஸ்லிம்களும் அயற்கிராம முஸ்லிம்களும் என சுமார் முன்னூறு பேருக்கு மேற்பட்டோர்  இந்தத் தொழுகையில் கலந்து கொண்டனர்.

கிண்ணியா ஜம்மிய்யத்துல் உலமா சபையின் சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம். ஹிதாயதுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்த  ஜும்மாத் தொழுகையில் கரிமலையூற்று ஜும்மாப் பள்ளி நிருவாகிகளான அதன் தலைவர் எம்.எச். அப்துல் கரீம், உப தலைவர்  ஏ.ஏ.எம். றமீஸ், செயலாளர் எம்.ஐ. சுபைர், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம். பஷீர், கிண்ணியா நகரசபை தலைவர் வைத்தியர் எம். ஹில்மி, சுமையா அறபுக் கல்லூரியின்  விரிவுரையாளர் எம்.ரீ. மஹ்மூத் உட்பட பெரும் எண்ணிக்கையான ஊர்ப் பிரமுகர்கள்  இன்றைய ஜும்மாத் தொழுகையில் கலந்து கொண்டனர்.


ஜும்மாப் பிரசங்கத்தை நிகழ்த்திய கிண்ணியா ஜம்மிய்யத்துல் உலமா சபையின் சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம். ஹிதாயதுல்லாஹ், இந்தப் பள்ள்pவாசலில் தொடர்ந்து தொழுகை இடம்பெறுவதற்கும் பள்ளிவாசலை சிறப்பான முறையில் கட்டிட நிர்மாணங்களை மேற்கொள்வதற்கும்  கரிமலையூற்றுப் பள்ளிவாசலைச் சூழ வாழ்ந்து இப்பொழுது வேறிடங்களில் வெளியேற்றப்பட்டிருக்கும் மக்கள் மீளக் குடியமர்த்தப்படவேண்டும். இதற்காகாக சகலரும் பேதங்களை மறந்து முயற்சிக்க வேண்டும் என்றார்.



1836 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு கம்பீரமாய் நின்ற பள்ளிவாசல் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் படையினரால் உடைத்து தரை மட்டமாக்கப்பட்டிருந்தது.

இதுவிடயமாக மஸ்ஜிதுல் கரிமலையூற்று ஜும்மாப் மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பாக அதன் தலைவர் எம்.வை.எம். ஆஸாத், உப தலைவர் எம்.ஐ. சுபைர், செயலாளர் எம்.எம். முனப்பர் ஆகியோர் 16.08.2014 அன்று வெள்ளைமணல் பொலிஸில் முறைப்பாட்டைச் செய்தனர்.

1998 ஆம் ஆண்டு முதல் இப்பகுதி கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பொழுது அனுமதியில்லாமல் கடற்தொழிலுக்குச் செல்ல முடியாத நிலைமை வந்தது.

2005 ஆம் ஆண்டிலிருந்து மீனவர்களுக்கு கடற்படையினர் முற்று முழுவதுமாக பாஸ் நடைமுறையை அறிமுகப்படுத்தினர்.

2009 இந்தப் பகுதியிலிருந்து கடற்படையினர் விலகியதும் இராணுவத்தினர் தமது  கவச வாகனங்களைக் கொண்டு வந்து இடத்தைக் கைப்பற்றி விட்டார்கள்.
பள்ளிவாசல் உட்பட இன்னும் அநேகமான பொது மக்களின் இடங்களையும் அவர்கள் கையகப்படுத்திக் கொண்டனர்.