மட்டக்களப்பில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரிய அளவிலான பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு

(சிவம்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு மட்டக்களப்பு  மாவட்டத்தின் அனர்த்த நிலை பற்றித் தெரிவித்தபோது பாரிய அளவிலான பணிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (19) முதல் தொடர்ச்சியதக மழை பெய்து வருவதனால் ஏற்படும் வெள்ள அனர்த்தத்திற்குள்ளாகும் மக்களை மீட்டு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது சம்பந்தமான கூட்டம் நேற்று (20) மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது மேலும் அவர் தெரிவிக்கையில்


அனர்த்தத்திற்குள்ளானவர்களை மீட்க முப்படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் , நிவாரணப் பொருட்களை வழங்க பிரதேச செயலாளர்களிடம் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் எதற்கும் அச்சம்கொள்ள தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்சழியன், அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் எஸ். இன்பராஜன், பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன். ரவீந்திரன், மட்டக்களப்பு 12 கஜபா ரெஜிமென்ட் படையணியின் கட்டளை அதிகாரி ரொகான் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர்.தெரிவித்தார்.

கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று மற்றும் இடியுடன் சுடிய மழை பெய்யும் எனவும் நாளை ஞாயிறு (21) காலை 9.00 வரையான 24 மணி நேரத்தில் 150 மி.மீ மழை யெ;யும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இப்பிதேசங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யுமாகையால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை வெள்ளிக்கிழமை (19) காலை. 8.30 மணி முதல் நேற்று (20) பி.ப. 2.30

மணிவரையான காலப்பகுதியில் மட்டக்களப்பில் 217.6 மி.மி. மழை பெய்துள்ளதாக வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.