த. தே கூட்டமைப்பானது எதைக் கூறினாலும் அது விடுதலைப் புலிகளின் குரலாக தென்னிலங்கையில் கருதப்பட்டது

இந்த ஜனாதிபதித் தேர்தலிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்கு சிந்தித்து செயலாற்றும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் கூறியிருக்கிறார்.அந்தக் கூற்றை வெளிநாட்டில் உள்ள தமிழ் மக்களின் நேசம் காட்டும் இயக்கங்களும், கட்சிகளும், இங்குள்ளவர்களும் அதை பின்பற்ற வேண்டும்.

என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்தார்.

திங்கள் கிழமையன்று கண்ணகிபுரம் வாழைச்சேனை மரண நலன் புரிச் சங்கக் கூட்டம் பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஏ.ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்படி சங்கத்திற்கு அதன் நலன் கருதி ஒலிபெருக்கி சாதனங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நேரத்தில் எதுவுமே பேசாமல் மௌனமாக இருக்கின்றது.மக்களாகிய நாங்கள் என்ன செய்வதென்று அறியாமல் இருக்கின்றோம்,என நீங்கள் நினைக்கலாம்.கடந்த காலத்தில் நடந்த ஜனாதிபதித் தேர்தல்களிலே  தமிழ் தேசிய கூட்டமைப்பானது எதைக் கூறினாலும்  அது விடுதலைப் புலிகளின் குரலாக தென்னிலங்கையில் கருதப்பட்டது.  அதற்கு எதிர் மாரான பிரச்சாரம் செய்யப்பட்டது.அதனால்தான் நாங்கள் இவ்வேளையில் அமைதிகாக்க வேண்டிய தேவையுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பானது மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூற வேண்டியதற்கு முன்பே தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டார்கள் என நாங்கள் நினைக்கின்றோம். இறுதி சந்தர்ப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை என்ன செய்ய வேண்டியது என்பதை மக்களுக்கு அறிவிக்கும்.

நாம் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளது.கடந்த காலங்களில் மக்களுக்காக போராடிய தமிழ் இயக்கங்கள் பல இருந்தன.அந்த இயக்கங்;களுக்குள் கருத்து முரன்பாடு இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.ஒருவருக் கொருவர் அடிபட்டதும் உங்களுக்கு தெரியும். இன்று பல கட்சிகளில் நாங்கள் இருக்கின்றோம்.ஆனால் எமக்கென்று எமது உரிமைகளை பெறத் துடித'துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டிய நேரத்தில் இருக்கின்றோம்.

தென்னிலங்கை அரசியலிலே ஒரு இஸ்த்திரத் தன்மையற்ற நிலமை நிலவிக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.கடந்த போராட்டக் காலங்களில் தமிழ் மக்கள் ஒரு பீதியுடன் வாழ்ந்தோம்.எந்த நேரத்தில் எங்கு குண்டு வெடிக்கப் போகிறதோ என்ற ஒரு பயப் பீதியுடன் வாழ்ந்தோம்;.

அதே மாதிரி ஒரு நிலமை தற்போது தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ளது.எந்த நேரத்தில் ஒரு கட்சியில் இருந்து மற்றைய கட்சிக்கு ஆள் மாறுவார்கள் என்ற பயப் பீதியுடன் கட்சிகள் உள்ளன.

இந்த நாட்டிலே நடப்பது ஒரு அராஜக ஆட்சி,ஒரு அண்ணன் தம்பி ஆட்சி,இந்த ஆட்சியை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என ஒரு கட்சிக் கூட்டமே கிளம்பியுள்ளது.

இந்த நாட்டிலே யார் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழன் ஜனாதிபதியாக வரமுடியாது. சிங்கள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே வரமுடியும் என்பது உங்களுக்கு தெரியும்.

ஆனால் பொது வேட்ப்பாளராக வந்துள்ள எமது அயல் மாவட்டம் பொலநறுவையைச் சேர்ந்த மைத்திரி பால சிறிசேன கூறுகின்றார் 'தாம் பதவிக்கு வந்து இந்த ஜனாதிபதி முறைமையை நூறு நாட்க்களுக்குள் முடிவிற்கு கொண்டு  வருவேன் ஒரு தேசிய அரசாங்கம் அதில் அமைக்கப்படும்.அந்த தேசிய அரசாங்கத்தில் அனைத்து இனங்களையும் சேர்ந்த தமிழர்களாக இருந்தாலும் சரி சிங்களவர்களாக இருந்தாலும் சரி முஸ்லிம்களாக இருந்தாலும் சரி அனைவரும் சேர்ந்து ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்து குறிப்பிட்ட காலத்தினுள் எமது பிரச்சினைக்கு இந்த நாட்டினில் அதிகாரப் பரவலாக்கல் செய்து ஓர் நிரந்தர அமைதியைக் கொண்டு வருவதற்கு நான் முயற்சி செய்வேன்'.என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் எமது தலைவர் பொறுத்திருந்து பார்ப்போம்.தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன கூறுகின்றர்களோ அதற்கு பின்பு நாங்கள் முடிவு எடுப்போம் என கூறியிருக்கிறார்.

எனவே நாங்கள் அமைதியாக இருக்க வேண்டிய கால கட்டமும் அதே நேரத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டிய கால கட்டமும் இதுவாகும்.இன்று கட்சிகள் தாவும் படலம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் எமது பிரதேசங்களில் தமிழ் மக்கள் பல கோணங்களில் இருக்கின்றோம்.

ஒரு பக்கம் பிரதி அமைச்சர்,முன்னாள் முதலமைச்சர்,இன்னொரு பக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிணர்கள்,மாகாணசபை உறுப்பிணர்கள் எனவுள்ளோம். எனவே இந்த நேரத்தில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டிய நேரமாகும்.எங்களுக்குள்ளேயே நாங்கள் எங்களை பிரேத பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

நாங்கள் எதற்காக ஆயுதம் தூக்கினோம் எதற்க்காக போரடினோம்,இந்த மக்களுக்காக எந்த தேவைக்காக எங்களது உயிரை வெறுத்தோம்.போராட தீர்மானித்தோம்.

நான் போராட வெளிச் சென்ற காலம் 1982, இன்று உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கும் நான் 1986 இல் உயிர் இழந்திருக்கும் நிலமை.மூன்று குண்டுகள் அடிபட்டு உயிர் தப்பினேன்.இதனை எனது பெருமைக்காக கூறவில்லை.எத்தனையோ பேர் இவ்வாறு உயிர் இழந்துள்ளனர்.எல்லாம் எதற்க்காக,

இன்று எமக்கென்று ஒரு விடிவெள்ளி தெரிகிற நேரம்.கட்சிகளுக்கிடையே கட்சி தாவும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.இது சர்வ சாதாரணம்.

இந்த நேரத்தில் தமிழர்கள் நாங்கள் ஒற்றுமையாக சேர்ந்து எமது மக்களுக்காக எங்களது கட்சி வேறுபாடுகளை மறந்து யார் உதவி செய்வதற்கு தயாராக இருக்கின்றாரோ அவருக்கு  உதவி செய்து எமது உரிமைகளை பெற்று இந்த நாட்டில் சிங்கள மக்கள் எத்தனை சுகங்கள் அனுபவிக்கின்றார்களோ,அவர்களது அரசியல் அபிலாசைகள் 'ர்த்தி செய்யப்படுகின்றதோ அதே நிலமையில் எங்களை நாங்கள் ஆளக் கூடிய ஒரு சுய நிர்ணயம் கொண்ட ஒரு பிரதேசத்தை வட கிழக்கு இணைந்த ஒரு மாகாணத்தை உருவாக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்காக போராடிய எமக்கு இந்த நாட்டிலே சமவுரிமை சம அந்தஸ்த்து தேவை.என்றார். மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பிணர் கி.கிருஸ்ணப்பிள்ளை (வெள்ளி மலை) கலந்து கொண்டு உரையாற்றினார்.