சித்தாண்டியில் மூன்று கிராமசேவகர் பிரிவுகளும் வெள்ள நீரில்- பிரதியமைச்சர் உதவிகள் வழங்கிவைப்பு

(சித்தாண்டி நித்தி) ஏறாவூர் பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி-4 சித்தாண்டி-3 மற்றும் சித்தாண்டி-2 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலுள்ள வீடுகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக இரவு பகல் என்று பாராமல் அவசர தேவையின் நிமிர்த்தம் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் உட்பட குழுவினர் சென்று பார்வையிட்டதுடன் மக்களுக்குத் தேவையான உடனடித்தேவையான பாய் மற்றும் வெற்சீட் போன்ற பொருட்களை உடனடியாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளித்னர்.

சித்தாண்டியில் பல பகுதிகளில் நான்கு அடிக்குமேல் வெள்ள நீர் காணப்படுகின்றது.; சில ஓலைக்குடிசைகள் மற்றும் கொட்டில்கள் வெள்ள நீரினால் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.

வீட்டு வளர்ப்பு கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்குச் கொண்டு சேர்த்துள்ளனர். வெள்ள நீர் உயர்வடைந்ததினால் அதிகமான வீட்டு வளர்ப்பு நாய்கள் மற்றும் கோழிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் வீடுகளின் கூரைகளில் தங்கியுள்ளது.

வெள்ளத்தனால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான முறையில் ஏறாவூர்பற்று பிரதேச செயலகம் வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.