கிரான் பிரதேச மூன்று கிராமங்களிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

(சித்தாண்டி நித்தி)கிரான் பிரதேச செயலக பிரிவிற்குப்பட்ட பூலாக்காடு கிராமசேவகர் பிரிவுகளிலுள்ள பிரம்பயடித் தீவு முருங்கன் தீவு மற்றும் சாரவெளி போன்ற கிராமங்களிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த தினங்களில் பெய்த கனத்த மழையினால் குளங்களின் நீர்; மட்டம் உயர்வடைந்ததன் காரணமாக பல குளங்களில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டமையினால்  வெள்ளப்பெருக்கு அதிகரித்த நிலையில் இப்பிரதேச மக்களின் போக்குவரத்து மற்றும் அன்றாட நடவடிக்கை ஸ்தம்பிதம் அடைந்திருந்த நிலையில் கிரான் பிரதேச செயலக அனார்த்த முகாமைத்துவக்குழு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக படகுகளில் ஏற்றி இறக்கி கிரான் விவேகானந்தா வித்தியாலயத்தில் 46 குடும்பங்களையும் மற்றும் கோரகல்லிமடு வித்தியாலயத்தில் 115 குடும்பங்களையும் தங்கவைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அடிப்படை வசதிகளை கிரான் தெற்கு பிரதேச செயலகம் மேற்கொண்டுவருகின்றது.

வெள்ளப்பெருக்கு காரணமாக தொழில் மற்றும் உடமைகளை இழந்த நிலையில் மிகவும் கஸ்டத்தின் மத்தியில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதன் உட்ப்பட குழுவினர் பார்வையிட்டதுடன் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை விசேடமாக கௌ;வனவுசெய்து அவ்விடத்தில் மக்களுக்கு பகிர்ந்தளித்தனர். 
மற்றும் இராணுவத்தினரும் மக்களுக்குரிய தேவைகளை அறிந்து அவர்களின் பணியினை செய்துவருதைக் காணக்கூடியதாகவுள்ளது. பாதுகாப்பு மற்றும் உணவு சமைப்பது போன்ற சேவைகளை வழங்கிவருகின்றனர். 

இதேவேளை தன்னாமுனையில் இயங்கிவருகின்ற இளைஞனர் அபிவிருத்தி மன்ற அகம் நிறுவனத்தினர் தாங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு சுமார் 260 வெற்சீட்களை வழங்கிவைத்தனர். இதன்போது அகம் நிறுவனம் இம்மக்களுக்கு முதல்முதலாக வருகைதந்து உதவிசெய்தமைக்கு அவர்களின் குழுமத்திற்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.