(சித்தாண்டி நித்தி) ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட முறக்கொட்டான்சேனை ஆற்றில் இனந் தெரியாத 35க்கும் 40க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆணின் சடலம் ஒன்று கரை ஒதிங்கியுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
முறக்கொட்டான்சேனை ஆற்றில் வழமையாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வது வழமை, இன்று (03) காலைவேளையில் வழமைபோல் மீன் பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் சடலம் ஒன்று நீரில் மிதப்பதைக் கண்டதாகவும் பின்பு மீன்வர்கள் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து பொலிசார் அவ்விடத்திற்கு விரைந்து சடலம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டனர்.
இதுவரைக்கும் இனங்காணப்படாத நிலையில் சடலம் ஆற்றிலிருந்து எடுத்துவரப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பெரும்பாலும் வெள்ளத்தினால் தூர இடங்களில் இருந்து வந்து இச்சடலம் கரையொதிங்கியிருக்கலாம் எனவும் கடந்த ஒரு கிழமைக்குள் இச் சம்பவம் நடந்திருக்கலாமென சந்தேகிக்கின்றனர்.
இச் சடலத்தை விரைவில் இனம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை வேண்டி நிற்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.