மட்டக்களப்பு மாவட்ட கடற்கரை கபடி போட்டி 2025!!


(ஆர்.நிரோசன்)


மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இன்று(13) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் ஆண் , பெண் இருபாலாருக்குமான கடற்கரை கபடி போட்டி இடம் பெற்றது.

பிரதேச மட்டத்தில் தெரிவாகி இருந்த அணிகள் மாவட்ட மட்ட போட்டிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆண்கள் பிரிவில் அரையிறுதி ஆட்டங்களுக்கு செங்கலடி,வாழைச்சேனை, புதூர்,மட்டக்களப்பு மண்முனை வடக்கு ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றிருந்தனர்.

இறுதிப் போட்டிக்கு செங்கலடி மற்றும் மண்முனை வடக்கு அணியினர் தெரிவாகி 19:37 என்ற புள்ளி வித்தியாசத்தில் மன்முனை வடக்கு அணியினர் வெற்றி பெற்றனர்.

பெண்கள் பிரிவில் கிரான் மற்றும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு அணியினர் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி 32:12 புள்ளி வித்தியாசத்தில் கிரான் அணியினர் வெற்றி பெற்றனர்.

பெண்கள் பிரிவில்கிரான் அணியினர்கடந்த ஆண்டு2024 தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்று கிழக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட மட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் கிழக்கு மாகாண போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்த்தர் பி.ஜெயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மண்முனை வடக்கு விளையாட்டு உத்தியோகஸ்த்தர் ஏ.சிவகுமார், கோறளைப் பற்று விளையாட்டு உத்தியோகஸ்த்தர் கே. சங்கீதா,கோறளைப் பற்று தெற்கு விளையாட்டு உத்தியோகஸ்த்தர் டி.பிரசாத், குமரன்,ரவிச்சந்திரன்,அப்சலட் வின்சென், ஜே. டி .றோசைரோ ஆகியோர் நடுவர்களாக மத்தியஸ்தம் வகித்தனர்.