மாணவர்கள் மன்னிப்பு கோரும்வரை கலைகலாசார பீட விரிவுரைகளுக்கு செல்வதில்லை என விரிவுரையாளர்கள் தீர்மானம்!

(தீரன்)
இன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்வதற்காக ஒன்று திரண்டிருந்த  மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தச் சென்ற கலைகலாசார பீட
விரிவுரையாளர்களுடன் ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்ட மாணவர்கள் மன்னிப்பு கோரும் வரை மாணவர்களுக்கான விரிவுரைகளுக்கு செல்வதில்லை என கலைகலாசார பீட விரிவுரையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

இன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில்  ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்வதற்காக ஒன்று திரண்டிருந்த கலைகலாசார பீட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தச் சென்ற கலைகலாசார பீட விரிவுரையாளர்களுடன் ஒழுக்கமற்ற முறையில் மாணவர்கள் சிலர் நடந்துகொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றிலிருந்து(30.01.2015) கலைகலாசார பீட விரிவுரைகளுக்கு செல்வதில்லை என தீர்மானித்துள்ளதாக கலைகலாசார பீட பீடாதிபதியூடாக உபவேந்தருக்கு அறிவித்துள்ளனர்.

தங்களுடன்  ஒழுக்கமற்ற முறையில் மாணவர்கள் நடந்துகொண்டதாகவும் குறித்த ஆர்ப்பாட்டம் குறித்து எந்தவித முன் அனுமதியையும் பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அது குறித்து பேசுவதற்கு சென்ற விரிவுரையாளர்களை அவமதித்து செயற்பட்டமையானது எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதனால் குறித்த மாணவர்கள் மன்னிப்பு கோரும் வரை கலைகலாசார பீட விரிவுரைகளுக்கு செல்வதில்லை என தீர்மானித்துள்ளதாக விரிவுரையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.