இரும்புக்கம்பியால் சூடு வைக்கப்பட்ட பாடசாலை சிறுவர்கள்


இரும்புக்கம்பியால் பாடசாலை செல்லும் இருசிறுவர்கள் அவர்களைப்பெற்றெடுத்த சொந்தப் பெற்றோரால் துடிக்கத்துடிக்கச் சூடுவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை   தாய்மார்களே இவ்விதம் கதறக்கதற சூடுவைத்தவர்களாவர்.


 நேற்று   வெள்ளிக்கிழமை நண்பகலளவில் மனிதஅபிவிருத்திதான உதவி இணைப்பாளர் எம்.ஜ.றியால் மற்றும் தேசியசிறுவர்பாதுகாப்பு அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் யு.எல். அசாருதீன் ஆகியோர் சூடுபட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சகிதம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குச்சென்று அவர்களை சட்டவைத்தியஅறிக்கைக்காக அனுமதித்துள்ளனர்.


இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசத்திலுள்ள ஒரு தமிழ்ப்பிரதேசசெயலகப்பிரிவில் இடம்பெற்றுள்ளது.
சூடுவைக்கப்பட்டு 04நாட்களுக்குப்பிறகே அவர்கள் செல்லும் பாடசாலை ஆசிரியரொருவருடாக தெரியவந்தது.

பாடசாலையில்தரம்1 பயிலும் 07வயதுடைய சிறுவனது வலது கரத்திலும் தரம் 4 பயிலும் 09 வயதுடைய சிறுமியினது இருகரங்களிலும் சூட்டுக்காயங்களிருந்தன.   அவர்களை விசாரணை செய்தபோது துடிப்புத்தனம் மற்றும் அவர்களது நடவடிக்கையுமே இவ்வாறு சூடுபோடக்காரணமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதனன்று முதன்முதலில் பாடசாலையில் பார்த்ததும்  இவர்களை ஆஸ்பத்திரியில் சேர்க்கவேண்டிய அவசியமிருந்தது. எனினும் முறைப்படி அணுகவேண்டும் என்பதற்காக உடனடியாக சிறுவர் துஸ்பிரயோகத்தை முறையிடும் 1929 தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்தினார். பின்னர் குறிப்பிட்ட பிரதேச செயலாளருக்கு அறிவிவிக்கப்பட்டிருக்கின்றது.

 வியாழனன்று பெற்றோரை அழைத்து விசாரித்ததாக தகவல். பிரதேசசெயலக தே.சி.பா.அதிகார சபை அலுவலர்களுக்கும் சிறுவர் நன்னநடத்தை அலுவலர்க்குமிடையே சீரான தொடர்புகள் இன்மையே இதனை தாமதப்படுத்தக்காரணமென்பது தெரிகிறது என அவர் தெரிவித்தார்..