தமிழ் மக்களின் பிறப்பு வீதம் தொடர்ச்சியாக குறைவடையுமாக இருந்தால் பல பாடசாலைகள் மூடப்படும்.

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணத்தில் அதிக சனத்தொகையில் தமிழ் மக்கள் இருந்தாலும் இன்று பாடசாலைகளில் 39வீதமான மாணவர்களே கல்வி பயில்கின்றனர்.  இதனால் கடந்த வருடம் பெரியகல்லாற்றில் இருக்க கூடிய ஆறு பாடசாலையில்  ஒரு பாடசாலை இந்த வருடத்துடன் மூடப்படுகின்றது. ஏன் மூடப்படுகின்றது என்றால் சென்ற வருடம் தரம் 1இல் 35மாணவர்கள் சேர்க்கப்பட்டனர் ஆனால் இந்த வருடம் எந்த மாணவர்களுமே சேர்க்கப்படவில்லை இதே போன்று எம்மக்களின் பிறப்பு வீதம் தொடர்ச்சியாக குறைவடையுமாக இருந்தால் இது போன்று பல பாடசாலைகள் மூடப்படும். இது தொடர்பில் அனைத்து மக்களும், அரச உத்தியோகத்தர்களும் சிந்திக்க வேண்டும்.

என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குளுவினமடு விநாயகர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டு விழாவின் போது தெரிவித்தார்.

மேலும் உரைநிகழ்த்திய அவர்

பிள்ளைச் செல்வம் இருக்குமாக இருந்தால் கல்விச் செல்வமும் ஓங்கி நிற்கும். ஆனால் இப்பாடசாலையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு இவ் எண்ணிக்கை அடுத்தடுத்த வருடங்களில் அதிகரிக்க வேண்டும். என்பதுடன் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 10வருடங்கள் கடந்த நிலையில் முதன் முதலாக ஒரு நிகழ்வு இப்பாடசாலையில் இடம்பெறுகின்றமை மிகவும் வரவேற்கத்தக்க விடயம். எனவும் குறிப்பிட்டார்.