பரீட்சை வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு வலயக்கல்வி பணிப்பாளரே பொறுப்புக்கூற வேண்டும்

(செங்­க­லடி நிருபர்)
மட்­டக்­க­ளப்பு கல்வி வல­யத்தின் உயர்­தர மாண­வர்­க­ளுக்­கான இணைந்த கணித பாட பரீட்சை வினாத்­தாளில் இடம்­பெற்ற குள­று­ப­டி­க­ளுக்கு வல­யக்­கல்விப் பணிப்­பாளர் பொறுப்­புக்­கூற வேண்டும் என இலங்கை ஆசி­ரியர் சங்கம் தெரி­வித்­துள்­ளது.
மட்­டக்­க­ளப்பு கல்வி வல­யத்தில் நடை­பெற்ற பரீட்சைக் குள­று­ப­டி­களை கண்­டித்து இலங்கை ஆசி­ரியர் சங்­கத்தின் மட்­டக்­க­ளப்பு கிளை செய­லாளர் பொ. உத­ய­ரூபன் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு
தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


அந்த அறிக்­கையில் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது,
மட்­டக்­க­ளப்பு கல்வி வல­யத்­தினால் நடத்­தப்­பட்ட உயர்­தர வகுப்பு மாண­வர்­க­ளுக்­கான இணைந்த கணித பரீட்சை வினாத்தாள் பண்பு சார் தரத்தை கொண்டு காணப்­ப­ட­வில்லை. இதனால் மாண­வர்கள் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய துர்ப்­பாக்கிய நிலைக்கு தள்­ளப்­பட்­டனர்.
மட்­டக்­க­ளப்பு கல்வி வல­யத்தில் பௌதீக விஞ்­ஞான பட்­ட­தாரி ஆசி­ரியர் நிய­மனம் செய்­யப்­பட்­டி­ருந்தும் தொடர்ச்­சி­யாக உயர்­தர பரீட்சை வினாத்­தாள்­களில் குள­று­ப­டிகள் இடம்­பெ­று­வ­தாக எமது சங்கம் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தும் வல­யக்­கல்வி பணிப்­பா­ளரின் பதில் பிரதிக் கல்­விப்­ப­ணிப்­பாளர் (கல்வி அபி­வி­ருத்தி) அச­மந்தப் போக்கின் கார­ண­மாக மேற்­படி குள­று­ப­டிகள் நடை­பெ­று­கின்­றன.
கல்வி வல­யத்தின் பதில் பிரதிக் கல்விப் பணிப்­பா­ளர்­க­ளான திட்­ட­மிடல் கல்வி அபி­வி­ருத்தி மற்றும் வள நிலைய பொறுப்­பாளர் ஆகியோர் பௌதீக விஞ்­ஞான பட்­ட­தா­ரி­க­ளாக இருந்தும் மேற்­படி பரீட்சை வினாத்தாள் குள­று­ப­டி­யாக நடை­பெற்­றுள்­ளமை வல­யத்தின் நிர்­வாக வினைத்­தி­ற­னற்ற
 செயற்­பாட்­டையே காட்­டு­கின்­றது.

இவ்­வி­டயம் தொடர்­பாக வல­யக்­கல்வி பணிப்­பாளர் பொறுப்­புக்­கூற வேண்டும். பதில் பிரதிக் கல்விப் பணிப்­பாளர் (கல்வி அபி­வி­ருத்தி) தொடர்பு கொண்ட போது பொறுப்­பற்ற விதத்தில் வகை கூறி­யமை வினைத்­தி­ற­னற்ற நிரு­வாக செயற்­பாட்டைக் காட்­டு­கின்­றது.

இவ்­வ­ருடம் நடை­பெ­ற­வி­ருக்கும் உயர்­தர பரீட்­சைக்கு தோற்­ற­வுள்ள பல மாண­வர்கள் வினாத்தாள் குளறுபடியினால் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மாகாண கல்விப் பணிப்பாளர் பரீட்சை குளறுபடிகள் தொடர்பாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.