சிவானந்தா பழைய மாணவர் சங்கம் நடாத்திய டேபிள் டென்னிஸ் பேட்மிண்டன் போட்டிகள்

(Battinews London ) சிவானந்தா பழைய மாணவர் சங்கம் (பிரித்தானிய கிளை)
நடாத்திய எட்டாவது வருட WINTER GALA Badminton & Table Tennis    போட்டிகள் 2015

இம் முறையும் வழமை போல் சிவானந்தா பழைய மாணவர் சங்கத்தின் (பிரத்தானிய கிளை) எட்டாவது வருட Winter Gala   Harrow Leisure Centre  இல் கடந்த 15ம் திகதி மாசி மாதம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் டேபிள் டென்னிஸ்  மற்றும் பேட்மிண்டன் போட்டிகள் உற்சாகமாக நடந்தேறியது.


டேபிள் டென்னிஸ்  போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை முறையே அரவிந்தன் (சங்கர்),  கண்ணன் மற்றும் அரவிந்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நான்கு பிரிவுகளாக நடைபெற்ற    பேட்மிண்டன் போட்டிகளில் வயதெல்லைகளற்ற பிரிவில் ரமேஷ் மற்றும் சுகுமார் முதாலாம் இடத்தையும் விஜய் மற்றும் துஷி ஆகியயோர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
நாற்பது வயதிற்கு மேற்பட்ட இரண்டாம் பிரிவில் முதாலம் இடத்தை ரமேஷ் மற்றும் சங்கரும் இரண்டாம் இடத்தை கண்ணன் மற்றும் சுகுமாரும் பெற்றுக்கொண்டனர்.
ஐம்பது வயதிற்கு மேற்பட்ட மூன்றாம் பிரிவில் சுறேஷ் ஆனந்தன் மற்றும் தயாளராஜ் ஆகியோர் முதலாம் இடத்தையும் ஹரி மற்றும் கணேஷ் ஆகியோர் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

நான்காவது பிரிவாக நடைபெற்ற 14 வயதிற்கு கீழ்ப்பட்டோர் போட்டியில் முதலாம் இடத்தை லக்ஷியனும் இரண்டாம் இடத்தை நிரூபனும் மூன்றாம் இடத்தை அனோஜனும் பெற்றுக் கொண்டனர்.