திருகோணமலை - கொழும்பு புளும் பீல்ட் அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டியில் திருகோணமலை வெற்றி

கதிரவன் -

திருகோணமலை மாவட்ட கிரிக்கட் அணிக்கும் கொழும்பு புளும் பீல்ட் கிரிக்கட் அக்கடமி அணிக்கும் இடையில் 17 வயதுக்கு உட்பட்டவர்களக்கான போட்டி திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் கடந்த வாரம் 16.04.2015 நடைபெற்றது.


முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும:பு புளும் பீல்ட் அணியினர் நிர்னயக்கப்பட்ட 40 பந்து பரிமாற்றங்களின் போது சகல இலக்குகளையும் 31 பரிமாற்றங்களில் இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அபினுக 16 ஓட்டம், யுக்சி 15 ஓட்டங்களைஅதிக பட்சமாக பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் வீ.சியாளன் 3 பந்து பரிமாற்றங்களில் 8 ஓட்டங்களைக் கொடுத்து 3 இலக்குகளை பெற்றுக் கொண்டார். சி.லதுசங்கர், சேனக்கா, மலிந்த ஆகியோர் தலா 2 இலக்குகளை பெற்றுக்கொண்டனர்.

102 ஓட்டங்கள் என்ற இலக்குடன்  பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய திருகோணமலை மாவட்ட அணியினர் 14.2 பந்து பரிமாற்றங்களில் 2 இலக்குகளை இழந்து  103 ஓட்டங்களை பெற்னர். அஞ்சன ஆட்டம் இழக்காமல் 52 ஓட்டங்களையும், டிவைன்ங்கர 35, வே.தக்சனன் ஆட்டம் இழக்காமல் 13 ஓட்டங்களை பெற்றனர்.

இப்போட்டியில்  திருகோணமலை மாவட்ட அணியினர் 8 இலக்குகளால் வெற்றி வெற்றனர்.