நாளை திருக்­கோவில் சித்­தி­ர­வே­லா­யு­த­சு­வாமி ஆலய ஆடி­ அ­மா­வாசை உற்­சவம் ஆரம்பம்

திருக்­கோவில் ஸ்ரீசித்­தி­ர­வே­லா­யு­த­சு­வாமி ஆலய ஆடி­ அ­மா­வாசை உற்­ச­வமும் தீர்த்­தோற்­ச­வமும் நாளை 28ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. பொத்­துவில், கோமாரி, தாண்­டி­யடி, விநா­ய­க­புரம் திருக்­கோவில் தம்­பி­லுவில் தம்­பட்டை, கோளாவில், பனங்­காடு, நாவற்­காடு, அக்­க­ரைப்­பற்று, கண் ­ண­கிபுரம், காரை­தீவு, கல்­முனை, பாண்­டிருப்பு, பெரி­ய­நீ­லா­வணை, நற்­பிட்­டி ­முனை, சேனைக்­கு­டி­யி­ருப்பு ஆகிய 18 ஊர்கள் இவ்­வா­ல­யத்தில் அங்­கம்­வ­கிக் ­கின்­றன. ஆடி ­அ­மா­வாசை உற்­சவம் ஆல­யத்தின் ஆடி ­அ­மா­வாசை உற்­சவம் ஆலய பிர­த­ம­குரு சிவஸ்ரீ சண்­முக மகேஸ்­வ­ரக்­கு­ருக்கள் தலை­மையில் நாளை 28ஆம் திகதி கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மாகி ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தீர்த்­தோற்­ச­வத்­துடன் நிறை­வ­டை­ய­வுள்­ளது. நாளை நீர்த்­தாங்கி திறப்­பு­ நி­கழ்வு அடி­யார்­க­ளுக்கு சீரான குடிநீர் வழங்க புலம்­பெயர் பரோ­ப­கா­ரி­யொ­ரு­வரின் உத­வி­யுடன் 10ஆயிரம் லீற்றர் கொள்ளக்­ கூ­டிய பாரிய நீர்த்­தாங்­கி­யொன்று 25 இலட்ச ரூபா செலவில் நிரு­மா­ணிக்­கப் ­பட்­டுள்­ளது. அது நாளை கொடியேற்ற தினத்தன்று மாலை 4 மணியளவில் சம் பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட வுள்ளதென ஆலயத் தலைவர் சு.சுரேஸ் தெரிவித்தார்.