கதிர்காமக் கந்தன் வருடாந்த அலங்கார உற்சவத்தில் ஆயிரக் கணக்கான மக்கள்

(கதிர்காமத்திலிருந்து ஜெ.ஜெய்ஷிகன்)
ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள கதிர்காமக் கந்தன் வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 17.07.2015ஆம் திகதி கொடியேற்றத்துடன் அரம்பமானது. இதனையொட்டி தினமும் முருகப் பெருமானது திருவூர்வலம் 31.07.2015 வரை நடைபெறும்.
இம் மாதம் 28ஆம் திகதி தீ மிதிப்பும் 31ஆம் திகதி தீர்த்தோற்சவமும் நடைபெற்று முதலாம் திகதியுடன் விழா நிறைவு பெறும்.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் யாத்திரிகர்களின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாக சிவனடியார் ஒருவர் தெரிவித்தார். யாத்திரிகர்களுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள இலங்கை வானொலியின் ரிதம் எப்.எம். அறிவித்துக் கொண்டிருந்த போதும் நீர் மற்றும் மலசலகூட வசதிகள் போதவில்லை என மக்கள் விசனம் தெரிவித்தனர். சலம் கழிப்பதற்கு 10 ரூபாய் வீதம் அறவிடப்பட்டே உள் அனுமதி வழங்கப்பட்டது. 
பற்றி நியூஸ் வாகர்களுக்காக  சில புகைப்படங்கள்.