மட்டக்களப்பு மாநகரசபையின் அனுசரணையில் கலையும சுவையும் நிகழ்வுகள்


(சிவம்)
மட்டக்களப்பு மாநகரசபையினால் நிர்மாணிக்கப்பட்டு நேற்று (29) திறக்கப்பட்ட சுற்றுலா மையத்திறப்பு விழாவையொட்டிய 'கலையும் சுவையும் நிகழ்வுகள்' இன்று ஞாயிற்றுக்pழமை நகர நீரூற்றுப் பூங்கா வளாகத்தில் நடைபெற்றன.

மாநகரசபையின் ஆணையாளர் எம். உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகள் நடைபெற்றன.


மட்டக்களப்பின் பாரம்பரிய இயற்கையான உணவுப் பொருட்களின் விற்பனைக் கூடங்களை மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதர்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா, மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பாஸ்கரன், கிழக்குப் பல்கலைக்கழக  அழகியற் கற்கைகள் நறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

மட்டக்களப்பில் உள்ள பல்லின மதத்தினருக்குமான பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகளான கபறிஞ்ஞா, கரகம், பக்கர் பைத், நவீன நாட்டுக் கூத்து, இசை முழக்கம், கூத்திசைப் பாடல்கள் மற்றும் வசந்தன் கூத்து என்பன அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் அதிதிகள் கௌரவிக்கப்பட்டதோடு அதிதிகள் பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகளில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.