சட்டம் படித்த சட்டத்தரணியின் அறியாமையை கண்டு வேதனையடைகின்றேன் - மா.உ இராஜேஸ்வரன்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஒக்டோபர் மாதம் தேசிய சுற்று சூழல் பாதுகாப்பு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு, கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மரக்கன்றுகள வளங்களும், சூழல் பாதுகாப்பும் என்ற தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் லவநாதன் தலைமையில் பெரியநீலாவணையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் கலந்துகொண்டார்.


அங்கு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர்;

இம்மாதம் சுற்று சூழல் மாதமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டு, மக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் தெளிவூட்டல்களும் இடம்பெற்றுவரும் நிலையில், சென்ற மாத இறுதியில் நற்பிட்டிமுனை முருகன் ஆலய தீர்த்த குளத்தில் பெருநாளுக்காக அறுக்கப்பட்ட மாடுகளின் கழிவுகள் கொட்டப்பட்டன. இது தொடர்பில் பிரதேச மக்கள் எனக்கு தொலைபேசி ஊடாக அறிவித்ததை அடுத்து அப்பிரதேசத்துக்கு சென்றேன். பின்பு அங்கே கொட்டப்பட்டிருந்த கழிவுகளை பார்வையிட்ட போது அங்கே மீண்டும் கழிவுகளை கொட்டுவதுக்கு வரும் வாகனகளை பார்த்தேன், பிரதேச மக்களையும் என்னையும் காண வாகனம் வந்த வழியாகவே திரும்பியது. பின் சற்று நேரத்தில் அவ்விடத்தில் திரண்ட முஸ்லிகள் என்னுடன் முரண்படும் வகையிலும், பெண்களை தரம்குறைந்த வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டு பேசினார். பள்ளிவாயல் நிர்வாகி ஒருவரிடம் நிலைமையை எடுத்துக்கூறினேன். இவ்விடத்தில் கொட்டுவதினால் சுகாதார பாதிப்பு உருவாகும், மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என்று எடுத்துக் கூறினேன், இருந்து அங்கு திரண்ட முஸ்லிம்களில் சிலர் மாடு அருப்பதுக்கு பயன்படுத்தும் கத்தி, மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் திரண்டுவர  நிலைமை மோசமாகலாம் என்பதினால் நான் கல்முனை பொலிசாரிடம் தொலைபேசி ஊடாக அறிவித்ததை தொடர்ந்து ஸ்தலத்துக்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அத்துடன் அங்கு கழிவுகளை கொட்டிய 5 பேரையும் பொலிசார் கைது செய்தனர்.

அறுக்கப்படும் மாடுகளின் கழிவுகள் சுகாதார முறையில் அழிக்கப்படுதல் வேண்டும் என்ற சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தல்களும் ஒவ்வொரு இறைச்சி வியாபாரிக்கும் தெரியும், அதனை அறிந்தும் நீர் நிலைகளில் கொட்டியமை குற்றம் என கல்முனை நீதிமன்றினால் தீர்ப்பு வழங்கப்பட்டு 5 பேருக்கும் தலா 10,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது. இது தான் நடந்தது.

ஆனால் அண்மையில் சிறுவர் தின நிகழ்வொன்றின் போது நீதிமன்ற தீர்ப்பை வேறுவிதமாக மக்கள் மத்தியில் கொண்டு சென்று என் மீது சேறு பூச என் சக மாகாண சபை உறுப்பினர் ஆறிப் சம்சுதீன் முயற்சிக்கின்றார். இங்கு இனவாத ரீதியாக கருத்துகளை கக்கியது யார்? இஸ்லாம் கூறுகிறது மாற்று மதத்தினருக்கு மதிப்பளியுங்கள் என்று, ஆனால் ஆலய தீர்த்த குளத்தில் கழிவுகளை கொட்டுவது தான் மதிப்பளிப்பா?

நற்பிட்டிமுனை  கிராமம் தமிழ் முஸ்லிம் மக்களின் கிராமம், இங்கு மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர், இங்கு நான் இனவாதமோ, பூச்சன்டியோ காட்டவேண்டிய அவசியமில்லை.

இனவாத கருத்துக்களை விடுத்து, சுகாதார ரீதியில் சிந்தித்தால் இச்சம்பவத்தின் நிலைமை மாகாண சபை உறுப்பினர் அரிப் சம்சுதீனுக்கு விளங்கும்.

என்று மாகாண சபை உறுப்பினர் அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றினர். இந்நிகழ்வில் பயனாளர்களும், பெருமளவான பெண்களும் கலந்து கொண்டனர்.