குளோபல் தகவல் முறையின் மூலம் தரவுகளை தரவு தளத்திற்கு அனுப்பும் செயலமர்வு


(சிவம்)
மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட இடங்களில் பெறப்படும் தரவுகளை சேகரித்து தரவுத் தளத்திற்கு அனுப்புவது பற்றிய அறிவூட்டு;மு; செயலமர்வு நேற்று (24) மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வீதிகளின் நிலமைகள், வீதிகளின் அருகில் நடப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், வர்த்தக நிலையங்கள், ஹோட்டல்கள் விளம்பரப் பலகைகளின் விபரங்கள், வீடுகள் உள்ளிட்ட ஆதனங்களின் சோலைவரி மதிப்பீடுகள் போன்ற பல்வேறு தரவுகளை குறித்த இடத்திலிருந்து கையடக்க கணனி மூலம் படம்பிடித்து குளோபல் தகவல் முறையின் மூலம் குறித்த தரவுத் தளத்திற்கு அனுப்புவதாகும்.

ஆசியா பவுண்டேசனின் ஆதரவில் நடைபெற்ற இச்செயலமர்வில் யாழ்ப்பாணம் ,மட்டக்களப்பு நகரசபை மற்றும் வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

மொறட்டுவ பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் மாலிங்க பெர்னாண்டோ, ஆசியா பவுண்டேசன் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சி. சசிகரன், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என். தனஞ்செயன், கணக்காளர் ஜோண்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.