தெற்காசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் அணி சார்பில் மட்டக்களப்பு வீரர் டினேஸ்காந்தன்

(கோபி) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 06.02.2016ம் திகதி தொடங்கி நிகழ்ந்து கொண்டிருக்கும் தெற்காசிய நாடுகளுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வில் இலங்கை Tennis அணி சார்பில் இலங்கையில் தொடர்ந்து 04 ஆண்டுகளாக நடப்பு முதல்தர Tennis வீரராக இருக்கும் மட்டக்களப்பு ஆரையம்பதி மாவிளங்கன்துறையை சேர்ந்த தங்கராஜா டினேஸ்காந்தன் பங்கேற்றுக்கொள்கின்றார்.

இவர் கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலயம், மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் ஆரம்ப கல்வி கற்று Tennis புலமைப்பரிசில் பெற்று கொழும்பு புனித பீற்றஸ் கல்லூரியில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கிடையேயான விளையாட்டுகளில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இவர் தங்கராஜா அன்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வர் ஆவார்.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தெற்காசிய விளையாட்டு போட்டியில் இவர் விளையாடும் காணொளி சிறிது நேரத்தில் வெளியிடப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர் தனது ஏழுவயது முதல் இன்று வரை Tennis விளையாட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி விளையாடுவதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெறுமை சேர்த்துள்ளார் என்பதோடு இவர் தற்போது நடைபெறும் தெற்காசிய விளையாட்டில் வெற்றிபெற Battinews சார்பாக வாழ்த்துகின்றோம்.






இவரது கடந்தகால விளையாட்டுக்களின் சில பதிவுகள்...