வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் இல்லமெய்வல்லுநர் திறனாய்வு

(ஜெ.ஜெய்ஷிகன்)
வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் வடாந்த “இல்லமெய்வல்லுநர் திறனாய்வு -2016” நேற்று வெள்ளிக்கிழமை (12.02.2016) அன்று பிறபகல் 2.00 மணிக்கு நடைபெற்றது.
பாடசாலையின் முதல்வர் அ.ஜெயஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார், கோட்டக்கல்விப் பணிப்பாளர் நாகலிங்கம் குணலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் சகிதம் மாலை அணிவித்து அதிதிகள் அழைத்து வரப்படுவதனையும் மாணவர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட எல்லாளன், இலங்கேஸ்வரன்,  இராஜராஜேஸ்வரன், சங்கிலியன் ஆகிய இல்லங்களையும் மாணவர்களின் அணிநடையினையும், உடற்பயிற்சிக் கண்காட்சியையும்  காண்க.