முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இறுதி நிகழ்வுகள் இன்று(13) சனிக்கிழமை பி.ப. 02.00மணிக்கு இடம்பெற்றது.

அதிதிகள் வரவழைக்கப்பட்டு தேசியகொடி, பாடசாலை, இல்லங்களின் கொடிகளும் ஏற்றப்பட்டு தேசியகீதமும் இசைக்கப்பட்டது. மாணவர்களின் வரவேற்பு நடனமும் இடம்பெற்று உத்தியோக பூர்வமாக வலயக்கல்விப் பணிப்பாளரினால் விளையாட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாணவர்கள், ஆசிரியர்களின் இல்லப்பவனியை தொடர்ந்து ஒலிம்பிக்தீபம் ஏற்றல், சத்தியப்பிரமாணம், இல்லங்களின் அணிநடை மரியாதை, பாண்டு வாத்திய கண்காட்சி, உடற்பயிற்சி கண்காட்சி, மாணவர்கள், ஆசிரியர்கள்,  பழையமாணவர்கள், பெற்றோர்களுக்கான விளையாட்டுக்களும் இடம்பெற்றது.

இதன்போது போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும், இல்லங்கள் மற்றும் மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

வித்தியாலயத்தின் அதிபர் சி.அகிலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், வலய கோட்டக்கல்விப் பணிப்பாளர்களான ந.தயாசீலன், த.சோமசுந்தரம், எஸ்.முருகேசபிள்ளை, உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், இளைப்பாறிய அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை சமூகத்தினர், கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பழைய மாணவர்கள், பெற்றார், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.