வாகரை பிரதேச கிராமிய மட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்களுக்கான முதலுதவி பயிற்சி...

(கோபி) வாகரைப் பிரதேசத்தில் அனர்த்தங்கள் ஏற்படுகின்ற வேளைகளில் பொதுமக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாகவும், அனர்த்த காலங்களில் ஏற்படும் திடீர் விபத்துக்களில் இருந்து பொதுமக்களை மீட்டு அவர்களுக்கான முதலுதவி சிகிச்சைகளை எவ்வாறு வழங்க வேண்டும் என்பது தொடர்பானதுமான  ஒரு நாள் பயிற்சி; கருத்தரங்கானது, மாவட்ட அனர்த்த மத்திய முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில்  வாகரைப் பிரதேச கிராமிய மட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்களுக்களின் அங்கத்தவர்களுக்கு 2016.05.26 அன்று வாகரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

இந் நிகழ்வில் வாகரை பிரதேச செயலாளர் S.R. ராகுலநாயகி, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் திரு. ச. இன்பராஜா, மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு. கசீர், பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு. K.புவிதரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமிய மட்ட அனர்த்த முகாமைத்துவ குழு அங்கதவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
வாகரை பிரதேச பொதுசுகாதார வைத்திய தாதிய சகோதரி திருமதி. M.ஸ்ரீ.தரதீசன் மற்றும் ஆசிரியரும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வாகரை பிரதேசத்திற்கான தலைவமான திரு.நா.தயாகரன்  ஆகியோர் வளவாளர்களாக இவ் ஒரு நாள் பயிற்சியை வழிப்படுத்தி நடாத்தினர்.