சர்வோதயா யுனிசெப் அனுசரணையில் போஷாக்கு விழிப்புணர்வு நிகழ்வு


சர்வ மத தலைவர்கள் மற்றும் சமூக தலைவர்களுக்கான  பல்துறை போஷாக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு சர்வோதயா யுனிசெப் அனுசரணையுடன் இன்று   சத்துருகொண்டான் சர்வோதயாபயிற்சி நிலையத்தில்  இடம்பெற்றது. 


இந்நிகழ்விலே தாய் சேய்  நல அதிகாரி, எம்.அச்சுதன்,  மகப்பேற்று பெண் நோயியல் நிபுணர், எம்.திருக்குமார்,  மற்றும் குழந்தை வைத்திய நிபுணர், திருமதி.விஜயகுமாரி திருக்குமார்  ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் கிரான், பட்டிப்பளை, வவுணதீவு மற்றும் செங்கலடி பிரதேசங்களில் இருந்து மத தலைவர்கள் மற்றும் சமூக தலைவர்கள்  பங்குபற்றினர். 


எமது அன்றாட வாழ்கையிலே சுகாதார ரீதியாக முன்னேற்றம் காணப்பட்டாலும் போஷாக்கு நிலைமை இன்னும்  பின்  தங்கிய நிலையிலேயே காணபடுகிறது. இந்நிலைமையினை மாற்றும்  நடவடிக்கைகளில் ஒன்றாக  இந்த விழிப்புணர்வு  கருத்தரங்கு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


அத்துடன், மதத்தலைவர்கள்,சமூக தலைவர்கள்  மூலமாக சுகாதாரம் போஷாக்கு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில்  ஏற்படுத்தி  எதிர்காலத்தில் போஷாக்கான சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதும் இந்நிகழ்வின் பிரதான  நோக்காகும்.

(சண் சபா)