மட்டக்களப்பில் நிறுத்தப்பட்டிருக்கும் குளிரூட்டப்பட்ட புகையிரத சேவையை உடனடியாக ஆரம்பிக்கவும் - முதலமைச்சர் கடிதம்

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து பயணிக்கும் குளிரூட்டப்பட்ட சேவை தற்பொழுது ஒவ்வொரு நாளும் இயங்கமால் இருப்பது தொடர்பில் முதலமைச்சருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளன.
கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து உடனடியாக அதனை வழமைபோன்று இயங்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதன் அமைச்சருக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சரின் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
மட்டக்களப்பில் இருந்து ஒவ்வொருநாளும் கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரத சேவையில் குளிரூட்டி பொருத்திய தனியான பகுதி இயங்குவந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரமாக அக்குளிரூட்டி பொருத்திய பெட்டி சேவையில் இல்லை என்றதும் வழமையான பயனிகள் ஏமாற்றமடைந்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்ட கடித்தத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே மட்டக்களப்பில் இருந்து அதிக வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் புகையிரத சேவையில் குறிப்பிட்ட பகுதியினை இடைநிறுத்தியிருப்பது கண்டிக்கத் தக்கது. எனவே உடனடியாக அதனைப் பொருத்தி சேவையிலிடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களை விட சிறந்த மாகாணமாகவும் எதிலும் குறையற்ற அனைத்தும் எங்களாலும் முடியும் என்ற துணிவுடனும் ஒவ்வொன்றையும் செய்து கொண்டு வரும் இந்நிலையில் இப்படியான வேலைகள் கவலையளிப்பதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.