மாகாண மட்ட கைப்பந்து (hand ball) போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணி 1ம் இடம், ஆண்கள் அணி 2ம் இடம்



42வது தேசிய விளையாட்டு விழாவில் இவ்வாண்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட  மாகாண மட்ட கைப்பந்து   (hand  ball ) போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணி 1ம் இடம், ஆண்கள் அணி 2ம் இடம் (கைப்பந்து) போட்டியானது கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் முதல் தடவையாக திருகோணமலை, கந்தளாய் லீலாரெட்ண விளையாட்டு மைதானத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களுக்கிடையில் 2016.06.26 ஆம் திகதி போட்டியானது நடாத்தப்பட்டது. இவ்வாறு நடாத்தப்பட்ட போட்டியில் மட்டக்களப்பு மாவட்டமானது பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தையும் ஆண்கள் பிரிவில் 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தை பிரிதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலக மாகாண மட்ட  கைப்பந்து போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணி 1ம் இடம், ஆண்கள் அணி 2ம் இடம் (கைப்பந்து) ஆண்கள், பெண்கள் ஆகிய இரு அணிகளும் பங்குபற்றி இவ்வெற்றியினை பெற்றுக்;கொண்டது குறிப்பிடப்பட்டது. ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் A.சிவகுமார் தலைமையில் பங்குபற்றிய பெண்கள் அணியின் பயிற்றுனராக உடற்கல்வி ஆசிரியிர் A.சந்துரு மற்றும் ஆண்கள் அணியின் பயிற்றுனராக விளையாட்டு உத்தியோகத்தர் A.சிவகுமார் ஆகியோர் செயற்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.