AIA காப்புறுதி கம்பனியினால் மாவட்ட மட்டத்தில் அதிகூடிய புள்ளியை பெற்ற மாணவிக்கு புலமை பரிசில் வழங்கி கௌரவிப்பு


ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பாரிய வலையமைப்பைக் கொண்டு இலங்கை உட்பட 18 நாடுகளில் இயங்கிவரும் AIA  காப்புறுதி கம்பனியினால் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளியை பெற்ற மாணவிக்கு புலமை பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இது கம்பனியின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் வருடா வருடம் கம்பனியினால் வழங்கப்படும் உயர் கல்விக்கான புலமைபரிசில் திட்டம்  என்பதோடு,இதனை பெறுபவர் கம்பனியில் ஒரு காப்புறுதிதாரராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கமைய 2015 ம் ஆண்டிற்கான  புலமை பரிசினை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற செல்வி பத்மசுதன் தக்சினியா அவர்களுக்கான புலமைபரிசு ஆவணங்கள் மற்றும் பரிசில்களை வழங்கும் நிகழ்வானது நேற்று (29/07/2016) மட்/ வின்சன்ட் உயர்தர மகளிர் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் செல்வி பத்மசுதன் தக்சினியா விற்குரிய சான்றிதல்களையும் பரிசில்களையும் பிராந்திய முகாமையாளர் யோ.லட்சுமிஹரன் வழங்கி வைத்ததோடு AIA  மட்டக்களப்பு கிளை சார்பாக இரண்டாம் நிலை உத்தியோகஸ்தர் கி.ஏட்ரியன் பயஸ் மற்றும் குழு தலைவர்களான சி.பிரபாகரன், பு.கயல்விழி, சி.மதிரூபன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் இம்மாணவிக்கு கற்பித்த ஆசிரியைக்கும் பாடசாலை அதிபருக்கும் சான்றிதல்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.