முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலத்தில் அனுமதி வழங்கப்பட்ட காணிகளை வன இலாகா அதிகாரிகள் அத்துமீறி பிடிப்பதாக கலையரசன் குற்றச்சாட்டு



(சா.நடனசபேசன்)


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்களால் திருக்கோவில் பிரதேசமக்களுக்கு அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட காணிகளை இன்று வன இலாக அதிகாரிகள் அத்துமீறி தன்வசப்படுத்துவதற்காக முயற்சிப்பது நல்லாட்சி அரசாங்கத்திற்கு குந்தகத்தினை ஏற்படுத்தும் செயற்பாடாகும் என கிழக்குமாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்
அன்னமலை 2 வேப்பையடி கலைமகள் வித்தியாலய விளையாட்டு மைதானத்திற்கு அரங்கு அமைப்பதற்கு  இளைஞர் சேவை மன்றத்தின் நிதி மூலம் ஒதுக்கப்பட்ட நிதியில் முத்தமிழ் இளைஞர் கழத்தின் ஏற்பாட்டில்  அடிக்கல் நாட்டு விழா  24 ஆம் திகதி புதன் கிழமை  நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
இந்நிகழ்வில் அம்பாரைமாவட்ட இளைஞர் சேவை அதிகாரி  முபாரக் அலி மற்றும் நாவிதன்வெளி பிரதேசசெயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மோகனகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் இந்த நாட்டிலே நீண்ட கால போர்ச் சூழல் நிலவியது அன்று எமது தமிழ் மக்கள் தங்களது காணிகளுக்குச் செல்லமுடியாமல் இருந்தது ஆனால் இன்னும் கூட திருக்கோவில் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் உள்ள காணிகளுக்குக் செல்ல முடியாத நிலை இருந்துகொண்டுஇருக்கிறது இந்நிலை நல்லாட்சி அரசாங்கம் அம்பாரை மாவட்டத்தினை புறக்கணிக்கும் செயலாகவே கருத வேண்டியுள்ளது இன்று இந்த நாட்டிலே நல்லாட்சி நடைபெறுகின்றது கடந்த ஆட்சிக்காலத்தில் ஊழல் செய்தவர்கள் கைது செய்யப்படுகின்றனர் இவ்வாறான  அம்பாரைமாவட்ட மக்களின் நலநிலும் நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும்
பின்தங்கிய பிரதேசங்களிலே இவ்வாறான விளையாட்டு அரங்கு அமைக்கப்படுவது சந்தோசமானதாக இருக்கின்றது அதுவும் இந்தப்பிரதேசம் கடந்த காலயுந்த சூழ்நிலையின்போது பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசம் ஆனால் இன்று ஓரளவிற்கு முன்னேறிவருகின்றது
முத்தமிழ் விளையாட்டுக் கழகத்தின் முயற்சியினாலும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியினாலும் இப்பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு அரங்குகு அமைக்கப்படுவதை இட்டுப் பாராட்டுகின்றேன்
இன்று இளைஞர்களின் முயற்சியின் பயனால் இந்த அரங்குக்கு நிதி ஒதுக்கப்பட்டு இருந்தும் அவ் அரங்கினை பூரணமாக அமைக்க நிதி போதாது உள்ளது இருந்தும்மாகாணசபையின் நிதி ஒதக்கீடு நிறைவு பெற்று இருந்தாலும் என்னால் முடிந்த சிறிய உதவிகளையாவது செய்ய நடவடிக்கை எடுப்பேன்
நாவிதன் வெளிப்பிரதேசம் கடந்த யுத்தத்தின்போது  பலதடவை இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்ட சமூகமாக இருக்கின்றது நாடு சுதந்திரம் அடைந்த கையோடு  கடந்த 1954 ஆண்டு முன்னாள்  பிரதமர் டி.எஸ்.சேனநாயக்காவினால் 44 குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு இருந்தது அவ்வாறு ஆரம்பிக்கபட்டதில் அந்த அந்தப் பிரதேசங்களில் அரசகாணிகள் ஒதுக்கப்பட்டு இருந்ததில் அதிகமாக அரசகாணி இந்த நாவிதன்வெளிப்பகுதிக்கே ஒதுக்கப்பட்டு இருந்தது
இந்தப் பிரதேச இளைஞர்களி ஒற்றுமையினால் பல முன்னெடுப்புகள் இடம்பெற்று வருகின்றது அது மட்டுமல்ல வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தின் பெறுபேறுகள் கடந்த காலங்களில் பெருமைகளைச் சேர்த்து வருகின்றைமை பாராட்டுக்குரியது
சில பிரதேசங்களில் அரசியல் மற்றும் அதிகார ரீதியான அபிவிருத்திகள் நடைபெற்றாலும் எமது பிரதேசத்தில் நடைபெறும் அபிவிருத்திக்கு நிகரில்லை கடந்த காலங்களில் பல அபிவிருத்திகளை முன்னெடுத்து பெயர் சொல்லக்கூடிய அளவிற்கு திறனாக இருந்து கொண்டு இருக்கின்றது அதற்குக் காரணம் இப்பிரதேச அதிகாரிகளின் செயற்பாடே
இந்த இலங்கை நாட்டிலே தமிழ் முஸ்லிம் சிங்களம் என வாழ்ந்துகொண்டிருந்தாலும் நீண்ட காலங்களாக  இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாலர்களால் புறக்கணிக்கப்பட்டுவந்ததுடன் பாராமுகமாக இருந்தமையினை அறிவீர்கள்  பல பிரதேசங்கள் கடந்த யுத்தத்தின்போது அழிவுற்ற நிலைமை இன்ன்றும் மக்கள் மனங்களில் இருந்து நீங்காமையுள்ளது
கடந்த ஆட்சியாளர்கள் அரச படைகளுடன் சேர்ந்து தமிழ் மக்களின் பகுதிகளில் அத்துமீறி செயற்hட்டு வந்துள்ளனர் இந்த நிலை மக்கள் மனங்களில் நம்பிக்கை இல்லாத தன்மையினை ஏற்படுத்தம் என்றார்.