கோட்டைக் கல்லாற்றின் நீண்டகால தேவைகள் நிறைவேற்ற ஏற்பாடு

(எஸ்.நவா)
கோட்டைக்கல்லாறு கிராமத்தின் நீண்டகாலப் பிரச்சனைகளான பொதுமயானம் பொதுவிளையாட்டு மைதானம் போன்றவற்றிக்கு தீர்வுகாண்பதற்கான பொதுக்கூட்டமானது கோட்டைக்கல்லாறு சமூக மேம்பாட்டு ஒன்றிய தலைவர் கந்தையா-உதயகுமார் அவர்களின் தலைமையில் 21.08.2016 ம் திகதி பி.ப 4.00 மணியளவில் மட்.பட்.கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.


பிரித்தானிய வாழ் கோட்டைக் கல்லாறு அமைப்பின் ஆலோசகரும் பொறியலாளருமான என்.பஞ்சாட்சரம் அவர்களால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள் மக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான விளக்கங்களும் அவரால் வழங்கப்பட்டது. இதில் மயானத்தினை ஓடையின் ஒரு பகுதியை மணலால் நிரப்பி பயன்படுத்துவதற்கும் பொது விளையாட்டு மைதானத்தை நவின மயப்படுத்தி சிறந்த மைதானமாக வடிவமைப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டதுடன் இக் கிராமத்தில் காணப்படுகின்ற நோய்களைக் குணப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் முடிவெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கிழக்குமாகாண சபை உறுப்பினர்  எம். நடராசா பொறியலாளர்  என்.பஞ்சாட்சரம் பிரித்தானியா வாழ் கோட்டைக்கல்லாறு அமைப்பின் தலைவர் ஆர்.புனிதராசா ஆலையங்களின் வண்ணக்கர் திரு.எம்.தம்பிராசா கோட்டைக்கல்லாறு நாற்சதுர சுபிஷேச சபையின் போதகர் வண.ரசிகுமார் ஓய்வுபெற்ற பிரதேச செயலாளரும் சமூக மேம்பாட்டு ஒன்றிய இணைத்தலைவருமான  எஸ்.அழகரெட்ணம் முன்னாள் ஆலையங்களின் வண்ணக்கர்  எஸ்.திருநாவுக்கரசு கோடடைக்கல்லாறு பொது சுகாதார பரிசோதகர்  கே.குபேரன்; கிரம சேவக உத்தியோகத்தர்கள் சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் பிரதிநிதிகள் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இன் நிகழ்வில் கலந்துகொண்டனர்.