சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும் மண்டூர் முருகனின் கொடியேற்றம் இன்று


(ஷமி.மண்டூர்)  கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான சின்னக்கதிர்காமம் என்று அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடார்ந்த உற்சவத்தின் கொடியேற்றம் (27) சனிக்கிழமை இன்று ஆலயத்தில் நடைபெற்ற ஆலய பூசையின் பின்னர் இரவு ஆரம்பமானது.

பிரதேச செயலாளர் ந.வில்வரத்தினம் தலைமையில் கடந்த (25) வியாழக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தின் பிரகாரம் (27) சனிக்கிழமை மாலை 8.30 மணியளவில் பிரதேச செயலாளர் ந.வில்வரத்தினம் தலைமையில் ஆலய வண்ணக்கர்,கப்புகனார்,நிருவாக சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என அனைவரது சம்மதத்துடன் இன்று கொடியேற்றம் நடைபெற்றது.

இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 20 நாட்கள் உற்சவம் நடைபெறவுள்ளது. அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி பூரணை தினத்தன்று பல்லாயிரக்கணக்காண பக்த அடியார்கள் சூழ தீர்த் தோற்சவம் இடம் பெறும்.