'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்,யுவதிகளை இயல்பு நிலைக்கு மாற்றல்' தெளிவூட்டல் கருத்தரங்கு

(ஜெ.ஜெய்ஷிகன்)
நிலைமாற்றுக் காலநீதி தொடர்பில்  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்,யுவதிகளை  இயல்பு நிலைக்கு மாற்றல் என்ற தொனிப் பொருளில் நேற்று திங்கட்கிழமை தெளிவூட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.
கறுவாக்கேணியில் அமைந்துள்ள சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்ற மேற்படி கருத்தரங்கிற்கு வாழைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன் தலைமை தாங்கினார்.

வளவாளர்களாக வாழைச்சேனை பிரதேச செயலாளர் வ.வாசுதேவன், தொழில் வழிகாட்டல் ஆசிரியர் அ.ஜெகநாதன் மற்றும் கமிட் நிறுவனத்தின் இணைப்பாளர் இரா.கலைவேந்தன்  ஆகியோர் கலந்து கொண்ட இளைஞர், யுவதிகளுக்கான தெளிவூட்டல்களை வழங்கினர்.
அதிதிகளாக சமூகசேவை உத்தியோகத்தர் அ.நஜீம், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.நடேசகுமார், சமாதானமும் சமூகப் பணியும் நிறுவனத்தைச் சேர்ந்த த.தயாபரன், வாழ்வின் உதயம் அமைப்பின் தலைவர் சி.பரமானந்தம் ஆகியோர்  கலந்து கொண்டனர்.