கருவி மூலம் அறுவடை செய்யும் விழா

மண்டூர் விவசாய விரிவாக்கல் நிலையத்திற்குட்பட்ட மாலையர்கட்டுப்பிரதேசத்தில் 2016 சிறுபோகத்தில் விவசாயத் திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட நாற்று நடும் கருவிமூலம் நாற்று நடல் முன்மாதிரிக் துண்டத்தில் 1 ஏக்கரில் வேளாண்மை நாற்று நடப்பட்டு அறுவடைநிகழ்வு அண்மையில் இடம்பெற்றது
இந்த நாற்றுநடும் விவசாயச் செய்கையில்  குறைந்த உற்பத்திச் செலவில் கூடுதலான விளைச்சல் 1 ஏக்கருக்கு  60 மூடை பெறப்பட்டது
இந்துடன் நோய்ப் பீடைத்தாக்கம் மிகக் குறைவாகவே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இதன் போது வலயம் தெற்கு உதவி விவசாயப்பணிப்பாளர் செல்வி எம்.சிவஞானம் மற்றும் மண்டூர் கமநலசேவைகள் நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் கோ.ஜெயக்காந்தன் ,விவசாயப்போதனாசிரியர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் விவசாயிகள் கலந்துகொண்டனர்