கோட்டைக்கல்லாறு பஞ்சதள கோபுர கும்பாபிஷேகம் ஒரு பார்வை.

[ ரவிப்ரியா ]
எண்ணி எட்டு மாதத்துள் பஞசதள கோபரத்தை முற்று முழுதாக அமைக்க முடியுமா? முடியும் என்பதற்கு முன் உதாரணமாக திகழ்கின்றது கோட்டைக்கல்லாறு பஞ்சதள கோபுரம்.  கோட்டைக்கல்லாறு அம்பாரைவில் பிள்ளையார்
ஆலயத்தின் தொன்மையை எதிர்கால சந்ததி உறுதிப்படுத்துவதற்கு இந்தக் கோபுரத்தை ஆதாரமாகச் சுட்டிக்காட்ட முடியும்.

இலங்கையில் மூலை முடுக்கெல்லாம, மலை முகடுகள் எல்லாம்; புத்தபெருமானின் திருவுருவம் எழுந்து நிற்கின்றது. எமது முக்கிய ஆலயங்களுக்கெல்லாம் மிக அருகில் புத்தபெருமான் காட்சி தருகின்றார். கதிர்காமம். உகந்தை, கோணேஸ்வரம் என்பன இதற்கு நல்ல உதாரணங்கள். காலப்போக்கில் எது முந்தியது என்பதை மூடி மறைக்க முந்திக் கொள்ளும் செயற்பாடுகள் இவை.


எமது தமிழர் தொன்மைக்கு முவேந்தர் அமைத்த ஆலயங்களே இன்றும் சான்று பகிர்கின்றன. இன்று அவர்கள் செய்த கைங்கரியம்தான் இன்று எமது வரலாற்றைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன எனவே ஆலயங்கள் என்பன தமிழர் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தவை. ஒல்லாந்தர்  கோட்டை கட்டியதால் கோட்டைக்கல்லாறு என்ற காரணப் பெயர் கொண்ட சரித்திர பிரசித்திபெற்ற கிராமம் இது. எனவே இந்த இராஜகோபுரமும் கோட்டைக்கல்லாற்றில் வரலாற்றுக்கு ஒரு மைல் கல்லாகும். ஏதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும் இது சக்திமிக்க சான்றாக அமையும்.
இயற்கை அரண்மிக்க இந்தக் கிராமத்தில் கூட இன,மதவாதிகள் கண்வைத்திருக்க் கூடும். பெரியகல்லாறு பாலத்தின் தொடக்கத்தில் புதரின் மத்தியில் சிறிய உருவிலான் புத்தர் காடசி தருவதையும் நாம் காண்கின்றோம்.

காலப்போக்கில் இராஜகோபர உயரத்தில் இந்த புத்த பெருமான் உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சிங்கள பௌத்த நாடு என்பதற்கான சின்னங்களாகவே அவை உருவாக்கம் பெறுகின்றன.  இதை இரு கிராமங்;களுக்குமான  ஆரம்ப அச்சுறுத்லாகவே கணித்து கவனமாகச் செயற்படவேண்டும்.

இந்நிலையில் அன்றைய எமது மூவேந்தர்கள் போல் அதிக பொருட்செலவில், தூர நோக்கோடு;. இக் கிராமத்தின் தொன்மைக்கான தொண்டாக முற்றுமுழுதாக சொந்தச் செலவில் பஞ்சதள கோபுரததை அமைத்துக் கொடுத்த அம்பாரைவில் பிள்ளையாரின் பக்தரான க.கனசபை குடும்பத்தினர் பிள்ளையாரின் நித்திய ஆசீர்வாதத்திற்குரியவர்களாகவே இருப்பார்கள். இதை வெறும் சமயத்தொண்டாக அல்லாமல் அதற்கும் மேலாக இனத்திற்கான ஆதாரமாகவும் இது அமைகின்றது. வரலாற்றுக்கான ஒரு பாதுகாப்பாகவும் பாராட்டப்படக் கூடியது.

மேற்கத்திய நாட்டில் இருந்து கொண்டு எட்டு மாதத்துள் முழுமையாக இந்த இராஜ கோபுரத்தை முடிப்பதென்பது இலகுவான காரியமுமல்ல. இது சிறந்த தொடர்பாடலுக்கும், திட்டமிடலுக்கும் ஆலய நிர்வாகத்தடனான. ஒருங்கிணைப்பிற்கும், உபயகாரரின் முகாமைத்தவத்திற்கும், இந்து இளைஞர் மன்றத்தின் ஒத்துழைப்பிற்கும். புரிந்துணர்விற்கும், மக்களின் கூட்டு முயற்சிக்கும்; எடுத்துக்காட்டாக அமைகின்றது.

பாரிய பணி பக்குவமாக நிறைவேறியுள்ளது. இராஜ போபுரத்திற்கு கல்வைத்தால் அது முழுமைபெற வருடக்கணக்கில் எடுப்பதுதான் வழக்கம். இவ்வளவு விரைவாக இடையூறு எதுவுமின்றி இது நிறைவேறியிருக்கின்றதென்றால் மனித சக்திக்கு அப்பால் தெய்வ சக்தியும் இணைந்தே செயற்பட்டிருக்க வேண்டும்.

தெய்வ சக்தி முற்று முழுதாக நிரம்பியே இருந்தது என்பதை பிரதான கும்பம் நிரூபித்ததை காணக் கூடியதாக இருந்தது. பிரதான கும்பததை ஏந்திவந்தவரை  ஏனையோர் தாங்கிப் பிடித்தே ஆலயத்தைவலம் வரவேண்டி ஏற்பட்டது. அந்தளவிற்கு கும்பத்தின் சக்திக்கு ஈடு கொடுக்க முடியாமல் கும்பத்தை ஏந்திவந்தவர் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.    
ஓகஸ்ட் - 5. கோட்டைக்கல்லாறு கிராமத்தின் எண்திசையும் பக்தியின் எழுச்சி. கதிரவனோ கும்பாபிஷேகத்தை கண்டு கொள்ள வேண்டும் என்பதில் வேட்கை கொண்டு ஆலயத்தை முற்றுகையிட்டிருந்தார். வீதி நந்;திக் கொடிகளின் அசைவில் வெப்பம் தணிந்தது. அரோகரா கோஷம் ஆகாயத்தை ஆக்கிரமித்தது.

உச்ச தளத்தில் பஞ்ச கலசங்களுக்கும் ஆளுக்கொருவராக  தலைப்பாகை கட்டி தயார் நிலையில் கும்பங்களுடன் நின்றனர் குருமார். ஆலயமணியின் அதிர்வு கட்டியம் கூற, மலர் மழை வானிலிருந்து பொழிய ஏக காலத்தில் பஞ்ச கலசங்களுக்கும் குடமுழுக்கு இனிதே நடைபெற்றது.