கிழக்கின் இளைஞர் முன்னணியினரின் (க.பொ.த)சாதாரணதரமாணவர்களிற்கான இலவசகல்விக்கருத்தரங்கின் 5ம் தொடர்...

(ஷமி.மண்டூர்)  மட்டக்களப்புமாவட்டத்தில் தமிழ் மாணவர்களின் கல்விஅடைவுமட்டத்தினைபடியுயர்த்தும் நோக்கில் கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்திகோபிநாத்தின்(பிரதிப்பணிப்பாளர்,தேசியசகவாழ்வு,கலந்துரையாடல் மற்றும் அரசகருமமொழிகள் அமைச்சு) திட்மிடலில் பட்டிருப்புக் கல்விவலயத்திற்குட்பட்டபடுவான்கரை பிரதேசத்தில் காணப்படும் திக்கோடை,மண்டூர்,தும்பங்கேணி,வெல்லாவெளி,கணேசபுரம,கோவில்போரதீவு,பழுகாமம்,களுமுந்தன்வெளிஆகியபிரதேசபாடசாலைகளில் (க.பொ.த)சாதாரணதரத்தில் கல்விபயிலும் மாணவர்களினைஒன்றிணைத்து மட்-பட்-வெல்லாவெளிகலைமகள் மகாவித்தியாலயத்தில் நடைபெறும் மாதாந்தகருத்தரங்கின் ஐந்தாம் தொடர் இம்மாதம் (24) சனிக்கிழமை (நேற்று) ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தது

தமிழ்,வரலாறு,விஞ்ஞானம்,ஆங்கிலம் ஆகியநான்குபாடங்களைஉள்ளடக்கியவாறுதிட்டமிட்டுள்ள இக்கருத்தரங்கின் தொடர்ச்சியானது இன்றையதினம்(25.09.2016) இடம்பெறவிருக்கின்றது. இக்கருத்தரங்கில் படுவான்கரைபிரதேசத்தினைச் சேர்ந்தசுமார் 300 ற்கும் மேற்பட்டமாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டுபலன் பெறுகின்றனர்.மாணவர்களிற்கானபாடக் குறிப்பீடுகள் மற்றும் கற்பித்தல் என்பனமுற்றாக இலவசமானசேவையாகவழங்கப்பட்டிருந்தது.

கருத்தரங்குசம்பந்தமாக முன்னணியின் தலைவர் கணேசமூர்த்திகோபிநாத் மாணவர்களிடம் கருத்துதெரிவிக்கையில் நான் எமதுபிரதேசங்களிற்குவருகைதந்துநேரடியாகஅவதானித்தபொழுதுநான் உணர்ந்தவிடயம்,மாணவர்கள் 
பூரணமானகல்விவளத்தினைபெறபாரியசிக்கல்களுக்குமுகம்கொடுப்பதுடன் பலதடைகளுடன் காணப்படுகின்றனர். இதனைகளைந்தெறிந்துகல்வியில் சிறந்த எம் சமூகத்தினைஉருவாக்கிஎமதுதமிழ் சமூகத்தின் நிலையினைஉயர்த்தவேண்டும் என்றஅவாஎன்னுள் உருவானதைதொடர்ந்து,என்போன்றஎண்ணமுடையபல இளைஞர்களை இனம்கண்டுஅவர்களையும் என்னுடன் இணைத்துஎமதுகிழக்கின் இளைஞர் முன்னணியினால் இவ் இலவசகல்விகருத்தரங்குதிட்டத்தினைவெற்றிகரமாகசெயற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். எனவேமாணவர்களின் காலடியில் சிறந்தவளங்களினைபொணர்ந்துதருகின்றோம், 

இதற்கானபிரதியுபகாரமாகமாணவர்களாகியஉங்களிடம் இருந்துசிறந்தபெறுபேறுகளைநான் எதிர்பார்க்கின்றேன். சந்தர்ப்பங்களினைசிறந்தமுறையில் பயன்படுத்திவாழ்க்கையில் முன்னிலையினைஅடைவீர்கள் எனதெரிவித்திருந்தார். அத்தடன் அடுத்தமாதமளவில் இலவசமருத்துவமுகாம் ஒன்றினையும் படுவான்கரைபிரதேசத்தில் செயற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.