மட்டக்களப்பு இருதயபுரம் புனித வின்சன்டி பவுல் முன்பள்ளி மாணவர்களின் மாபெரும் ஆக்கபடைப்பு சிறப்பு கண்காட்சி


மட்டக்களப்பு  இருதயபுரம் புனித வின்சன்டி பவுல் முன்பள்ளி மாணவர்களினால் பெற்றோர்களின் பங்களிப்புடன் இருதயபுரம் திரு இருதயநாதர் மண்டபத்தில் நடாந்தப்படும் கண்காட்சி நிகழ்வினை கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வானது அருட்பணி ட.லெஸ்லி  ஜெயகாந்தன் அவர்களுடைய தலைமையில் இடம்பெற்றது.   இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து  கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இந்நிகழ்ச்சியை  ஆரம்பித்து வைத்ததுடன் கண்காட்சியினை பார்வையிட்டு முன் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள்,  பெற்றோர்கள், நிர்வாகிகள்  ஆகியோர்களை மனதார பாராட்டினார். இக்கண்காட்சி நிகழ்வில்  குழந்தைகளின் மொழி விருத்தி, சொற்களஞ்சிய குவியல், சுகாதார பழக்க வழக்கங்கள், நல்வாழ்வுக்கு தேவையான வழிமுறைகள், விஞ்ஞான கருத்துக்களை வெளிப்படுத்த கூடிய படைப்புகள், கணித திறனை விருத்தி செய்ய கூடிய ஆக்கங்கள், சுற்றுச்சூழலின் பெறுமதியினை பிரதிபலிக்கின்ற ஆக்கங்கள், அழகியல் செயற்பாடுகள் பொன்ற தலைப்புகளுக்கு அமைவாக  ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 24,24,26  ஆம் திகதிகளில் தொடர்ந்தும் இக்கண்காட்சி காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை இடம்பெறும் என முன் பள்ளியின் தலைமை ஆசிரியை தெரிவித்தார்.